ஆர்சிபியின் கனவுக்கு தடை போட்ட சன்ரைசர்ஸ்: கடைசியில் கெத்துன்னு நிரூபித்த SRH!

Published : May 24, 2025, 02:11 AM IST

IPL 2025 RCB vs SRH : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

PREV
17
ஐபிஎல் 2025 கிரிக்கெட் 65ஆவது லீக் போட்டி

IPL 2025 RCB vs SRH : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளது. 10 அணிகள் இடம் பெற்ற இந்த தொடரில் 6 அணிகள் வெளியேறிய நிலையில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் என்று 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. எனினும் இதில் 1, 2, 3 மற்றும் 4 ஆவது இடங்களுக்கான ரேஸில் தான் ஒவ்வொரு அணியும் விளையாடி வருகின்றன.

27
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இந்த நிலையில் தான் 2ஆவது இடத்திலிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து நெட் ரன்ரேட் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. லக்னோவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முக்கியமான 65ஆவது லீக் போட்டி நடைபெற்றது.

37
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 231 ரன்கள் குவித்தது

இதில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தத். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.

47
சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட இஷான் கிஷன்

இஷான் கிஷன் 48 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து அசத்தினார். சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். கிளாசன் 13 பந்துகளில் 24 ரன்களும், அனிகேத் வர்மா 9 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து SRH அணிக்கு அதிக ரன்கள் கிடைக்க உதவினார்கள்.

57
42 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி தோல்வி

பின்னர் களமிறங்கிய RCB அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பிலிப் சால்ட் (32 பந்துகளில் 62 ரன்கள்), விராட் கோலி (25 பந்துகளில் 43 ரன்கள்) அதிரடியான தொடக்கம் கொடுத்தனர். ஆனால் அவர்கள் ஆட்டமிழந்த பிறகு ரன்வேகம் குறைந்தது. தொடர்ந்து விக்கெட்டுகள் விழ, வெற்றி நோக்கிச் சென்று கொண்டிருந்த RCB அணியின் பயணம் தடைப்பட்டது. இறுதியில், 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

67
அவே மைதானத்தில் முதல் தோல்வி

இந்த தொடரில் ஆர்சிபி பெங்களூருவில் விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வி மற்றும் 1 போட்டிக்கு முடிவு இல்லை. இதே போன்று அவே மைதானங்களில் 7 போட்டிகளில் 6 வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது. அது இந்தப் போட்டி தான். இதன் மூலமாக முதல் முறையாக ஆர்சிபி அவே போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

77
புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம்:

இந்தப் போட்டிக்கு முன்னதாக 17 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் அடிப்படையில் 2ஆவது இடத்திலிருந்த ஆர்சிபி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் 2ஆவது இடத்திற்கு முன்னேறியது. குஜராத் டைட்டன்ஸ் முதலிடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 4ஆவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளிப்பட்டியல் அடிப்படையில் தகுதிச் சுற்று, எலிமினேட்டர் மற்றும் தகுதிச் சுற்று 2 போட்டிகள் அமையும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

ஹைதராபாத் அணியானது விளையாடிய 13 போட்டிகளில் 5 வெற்றி 7 தோல்வி மற்றும் ஒரு போட்டிக்கு முடிவு இல்லாத நிலையில் புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. நாளை நடக்கும் கடைசி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories