தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
27
SA vs IND T20I
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான் வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்கம் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
37
Suryakumar Yadav vs Aiden Markram
இந்தப் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி விளையாடும். தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தென் ஆப்பிரிக்கா விளையாடும்.
47
SA vs IND
இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. உடல்நிலை சரியில்லாத நிலையில், 2ஆவது டி20 போட்டியில் விளையாடாத ருதுராஜ் கெய்க்வாட் இந்தப் போட்டியிலும் இடம் பெறவில்லை. ஆனால், தென் ஆப்பிரிக்கா அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸிற்கு பதிலாக டோனோவன் ஃபெரேரா விளையாடுகிறார்.
57
South Africa vs India T20
மேலும், மார்கோ ஜான்சன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கேசவ் மகாராஜ் விளையாடுகிறார். மேலும், ஜெரால்ட் கோட்ஸி நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நந்த்ரே பர்கர் அறிமுகம் செய்யப்படுகிறார்.