தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியின் போது ரிங்கு சிங் அடித்த சிக்ஸ் செய்தியாளர் மாடத்தின் ஜன்னல் கண்ணாடிய உடைத்ததற்கு ரிங்கு சிங் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நேற்று கியூபெர்காவில் நடந்தது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த திலக் வர்மா 29 ரன்களில் ஆட்டமிழந்தார். கண்ணாடி உடைந்ததற்காக மன்னிப்பு கேட்ட ரிங்கு சிங் - வீடியோ!
24
Rinku Singh
இதையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்ததோடு மட்டுமின்றி அரைசதமும் அடித்து ஆட்டமிழந்தார். அவர் 36 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து நடையை கட்டினார். பின்னர் வந்த ரிங்கு சிங் தனக்கே உரிய பாணியில் பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். அவர், 30 பந்துகளில் 50 ரன்கள் அடித்து முதல் முறையாக டி20 போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
34
Rinku Singh
இந்த நிலையில் தான் போட்டியில் 18.5 மற்றும் 18.6ஆவது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதில், ஒன்று செய்தியாளர் மாடத்தின் ஜன்னல் கண்ணாடியை சுக்கு நூறாக நொறுக்கியது. கடைசியாக 19.3 ஆவது ஓவரின் போது மழை குறுக்கிடவே ரிங்கு சிங் 68 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில், 9 பவுண்டரி, 2 சிக்ஸ் அடங்கும்.
44
Rinku Singh: SA vs IND 2nd T20I
இந்த நிலையில் தான் கண்ணாடியை உடைத்தது குறித்து ரிங்கு சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த ரிங்கு சிங் கூறியிருப்பதாவது: நான் இன்னிங்ஸிற்கு பிறகு வெளியில் வந்த போது தான் என்னிடம் கண்ணாடி உடைந்தது குறித்து சொன்னார்கள். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பிசிசிஐ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.