மேலும், 215 வீரர்கள் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் இடம் பெறுகின்றனர். அதாவது Uncapped என்று சொல்லப்படும் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள். இது தவிர அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த 2 வீரர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 10 செட்டுகளாக வீரர்களின் ஏலம் நடைபெற இருக்கிறது. இதில், ஒவ்வொரு செட்டிலும், பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், விக்கெட் கீப்பர், பவுலர், பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், விக்கெட் கீப்பர், பவுலர் என்று வீரர்களின் பட்டியல் இடம் பெற்றுள்ளது.