South Africa vs India 2nd T20I Live Score: விராட் கோலியின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்!

First Published | Dec 13, 2023, 9:01 AM IST

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 56 இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்து விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார்.

Suryakumar Yadav

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 10 ஆம் தேதி நடக்க இருந்த முதல் டி20 போட்டியானது டர்பனில் பெய்த மழையின் காரணமாக டாஸ் போட முடியாத நிலையில் ரத்து செய்யப்பட்டது.

Virat Kohli

இதையடுத்து இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நேற்று கியூபெர்கா மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஐடன் மார்க்ரம் பவுலிங் தேர்வு செய்தார்.

Tap to resize

SA vs IND T20I Live

அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ருதுராஜ் கெய்க்வாட் உடல்நிலை சரியில்லாத நிலையில், இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ரவி பிஷ்னோய் இடம் பெறவில்லை.

South Africa vs India T20I

இதையடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், 3 பந்துகள் பிடித்த ஒரு ரன் கூட எடுக்காமல் ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.    சுப்மன் கில்லும் 2 பந்துகள் பிடித்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அப்போது இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்து தடுமாறியது.

Team India

அதன் பிறகு திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இதில், திலக் வர்மா 20 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 29 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். South Africa vs India 2nd T20I: மழையால் வந்த வினை – 2ஆவது டி20 போட்டியில் கடைசி வரை போராடி இந்தியா தோல்வி!

Suryakumar Yadav

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ், இந்தப் போட்டியில் 15 ரன்கள் எடுத்திருந்த போது டி20 போட்டியில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். அவர், 56 இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்துள்ளார்.

Suryakumar Yadav

கேஎல் ராகுல் 68 இன்னிங்ஸ் விளையாடிய 2256 ரன்களும், 140 இன்னிங்ஸில் ரோகித் சர்மா 3853 ரன்களும், 107 இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி 4008 ரன்களும் எடுத்துள்ளனர். குறைவான இன்னிங்ஸ் விளையாடிய 2000 ரன்கள் கடந்தவர்களின் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

Suryakumar Yadav

பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் 52 இன்னிங்ஸ் விளையாடி 2000 ரன்களை கடந்துள்ளனர். விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் 56 இன்னிங்ஸில் 2000 ரன்கள் கடந்துள்ளனர். கேஎல் ராகுல் 58 இன்னிங்ஸில் 2000 ரன்கள் எடுத்துள்ளார்.

SKY - South Africa vs India T20I

மேலும், டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 5 இன்னிங்ஸில் 4 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இந்த நிலையில், தான், 29 பந்துகளில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். ஒரு கேப்டனாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அவர் அடித்த முதல் அரைசதம். கடைசியாக சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸ் உள்பட 56 ரன்கள் எடுத்துள்ளார்.

Suryakumar Yadav

இதன் மூலமாக ஒரு கேப்டனாக எம்.எஸ்.தோனி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒரு அரைசதம் கூட அடிக்காத நிலையில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக தோனி 36 மற்றும் 45 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!