South Africa vs India 2nd T20I
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று க்யூபெர்காவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
South Africa vs India T20I Gqeberha
சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிங்கு சிங் 68 ரன்கள் சேர்க்கவே கடைசி 3 பந்துகள் எஞ்சிய நிலையில், மழை குறுக்கிட்டது. அப்போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து மழை பெய்த நிலையில், 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டு டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
SA vs IND T20
பின்னர் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர்கள் ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் மேத்யூ ப்ரீட்ஸ்கே இருவரும் அதிரடியாகவே ஆரம்பித்தனர். இதில், ப்ரீட்ஸ்கே 16 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 49 ரன்களில் வெளியேறினார்.
SA vs IND 2nd T20I
அப்போது தென் ஆப்பிரிக்கா 8.6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் எடுத்துவிட்டது. அதன் பிறகு வந்த விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென் 7 ரன்களில் வெளியேற, டேவிட் மில்லர் 17 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக, 13.5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா அணியானது 5 விக்கெட் இழந்த நிலையில் 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
SA vs IND 2nd T20I
இதில், தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 14 ரன்கள் மற்றும் அண்டில் பெஹ்லுக்வாயோ 10 ரன்கள் எடுத்துக் கொடுக்கவே தென் ஆப்பிரிக்கா 7 பந்துகள் எஞ்சிய நிலையில், வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் 2 ஓவர்கள் கொடுத்து விக்கெட் எடுக்காமல் 31 ரன்கள் கொடுத்துள்ளார். முகேஷ் குமார் 3 ஓவர்கள் வீசி 2 விக்கெட் கைப்பற்றி 34 ரன்கள் எடுத்துள்ளார்.
South Africa vs India 2nd T20I
முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். சீனியர் மற்றும் அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜா விக்கெட் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா 1-0 என்று கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி வரும் 14 ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்க இருக்கிறது.
SA vs IND 2nd T20I Live
தென் ஆப்பிரிக்கா:
மேத்யூ ப்ரீட்ஸ்கே, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜெரால்ட் கோட்ஸி, லிசாட் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி.
SA vs IND 2nd T20 Live
இந்தியா:
யஷஸ்வி ஜெய்ஷ்வால், சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.