தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
25
Ruturaj Gaikwad
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று கியூபெர்காவில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்கம் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் இந்தப் போட்டியில் களமிறங்கவில்லை. அவருக்கு தென் ஆப்பிரிக்கா காலநிலை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அடுத்த போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.