South Africa vs India 2nd T20I: நல்ல வேல மழை வரல – டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங்!

Published : Dec 12, 2023, 09:03 PM IST

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

PREV
14
South Africa vs India 2nd T20I: நல்ல வேல மழை வரல – டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங்!
South Africa vs India 2nd T20I

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

24
South Africa vs India T20I Gqeberha

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று கியூபெர்காவில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்கம் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

34
SA vs IND T20I

தென் ஆப்பிரிக்கா:

மேத்யூ ப்ரீட்ஸ்கே, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜெரால்ட் கோட்ஸி, லிசாட் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி.

44
SA vs IND 2nd T20I

இந்தியா:

யஷஸ்வி ஜெய்ஷ்வால், சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.

இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் இந்தப் போட்டியில் களமிறங்கவில்லை.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories