Rohit Sharma
இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்தது. ஒட்டு மொத்த உலகமும் இந்த டிராபிக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு இந்திய அணி டிராபியை கைப்பற்றவில்லை. உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்தும் கோட்டைவிட்டது.
உலகக் கோப்பை தோல்வி - ரோகித் சர்மா வெளியிட்ட வீடியோ!
Rohit Sharma, cricket
உலகக் கோப்பையில் 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி என்று 10 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், ஆஸ்திரேலியா 7 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்தது. இதில் இந்தியா 240 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 6ஆவது முறையாக சாம்பியனானது.
Rohit Sharma
இது கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு வலியையும், ஏமாற்றத்தையும் கொடுத்தது. இந்த நிலையில், தான் கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு பிறகு ரோகித் சர்மா 4 நிமிட வீடியோவில் உலகக் கோப்பை தோல்வியால் ஏற்பட்ட வலியையும், வேதனையையும் பகிர்ந்ததோடு அதிலிருந்து மீண்டு வந்தது குறித்தும் கூறியுள்ளார்.
Rohit Sharma Video
முதல் சில நாட்களிலிருந்து எப்படி மீள்வது என்று எனக்கு தெரியவில்லை. குடும்பத்தினர், நண்பர்கள் தான் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். தோல்வியிலிருந்து மீள்வது என்று எனக்கு தெரியவில்லை. இதனை ஜீரணிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. வாழ்க்கை நகர்கிறது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும், நேர்மையாக எடுத்துச் செல்ல வேண்டும். தோல்வி கொடுத்த மனவலியிலிருந்து வெளியே வர வேண்டும்.
ICC Cricket World Cup 2023
ஒரு அணியாக நாங்கள் இத்தனை வருடங்கள் உலகக் கோப்பைக்காக கடுமையாக உழைத்தோம். கனவை எட்டமுடியாமல் போனது தான் ஏமாற்றமளிக்கிறது. இறுதிப் போட்டியில் என்ன தவறு செய்தோம் என்று கேட்டால், எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தோம். எல்லா நேரங்களிலும் நமது திட்டப்படி போட்டி அமையாது.
India vs Australia World Cup Final 2023
இந்திய அணியைப் நினைத்து பெருமைப்படுகிறேன். உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினோம். ஆனால் ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் இப்படி விளையாட முடியாது. இறுதிப் போட்டிக்கு பிறகு இந்திய அணி விளையாடும் விதம் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். தோல்வியிலிந்து மீண்டு வர எங்கு சென்றாலும் ரசிகர்கள் அங்கு வந்து இந்திய அணியை பாராட்டவும் செய்தனர்.
IND vs AUS World Cup Final
உலகக் கோப்பை தொடர் நடந்த அந்த ஒன்றரை மாதங்களும் ரசிகர்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவை பாராட்ட வேண்டும். ஆனால், எப்போதும் தோல்வியை நினைத்துக் கொண்டே இருந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் திரும்பாது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில், மக்களின் ஆதரவு மட்டுமே உறுதுணையாக இருந்தது. எனவே, திரும்பிச் சென்று மீண்டும் வேலை செய்யத் தொடங்கவும், மற்றொரு இறுதிப் பரிசைத் தேடவும் இது உந்துதலைத் தருகிறது என்று கூறியுள்ளார்.