ஆஸிக்கு ஆப்பு, சிக்கலில் இந்தியா – WTC புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா!

Published : Dec 01, 2024, 12:14 PM IST

WTC 2025 Points Table : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான போட்டிக்கான புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

PREV
15
ஆஸிக்கு ஆப்பு, சிக்கலில் இந்தியா – WTC புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா!
WTC 2025 Points Table

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலின் உச்சியில் ஒரு புதிய அணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்டில் இலங்கையை வீழ்த்திய பிறகு, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா 2ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது.

25
WTC 2025 Points Table: India Number 1

இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்படுமா?

இந்தியா தற்போது 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், தோல்வி அவர்களின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதைத் தடுக்கலாம். ஆஸிக்கு எதிரான எஞ்சிய 4 டெஸ்ட்களில் மூன்றில் வெற்றி பெற்றால், அடுத்த ஆண்டு இறுதிப் போட்டியில் இந்தியாவின் இடம் உறுதி செய்யப்படும், ஆனால் இது எளிதான காரியமல்ல.

35
SA vs SL 1st Test

தென் ஆப்பிரிக்காவின் சூப்பர் வெற்றி

மார்கோ ஜான்சன் தலைமையிலான புரோட்டியாஸ் பந்து வீச்சுத் தாக்குதல், 2ஆவது இன்னிங்ஸில் இலங்கையின் பேட்டிங் வரிசையைத் தகர்த்தது. 1991 இல் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டில் மீண்டும் நுழைந்ததிலிருந்து 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் ஆனார்.

45
Aiden Markram, South Afriva vs Sri Lanka Test

இலங்கை 42 ரன்களுக்குச் சரிந்தது:

முதல் இன்னிங்ஸில் 200 ரன்களைக் கடக்கத் தவறிய புரோட்டியாஸ் பந்துவீச்சாளர்கள் இரண்டாவது நாளில் மிகுந்த அழுத்தத்துடன் களமிறங்கி அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். மார்கோ ஜான்சன் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

55
South Africa 2nd Place in WTC Points Table

ஸ்டப்ஸ்-பவுமாவின் அற்புதமான சதங்கள்

டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (122) மற்றும் பவுமா (113) இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவின் அதிகபட்ச நான்காவது விக்கெட் கூட்டாண்மையான 249 ரன்களைப் பதிவு செய்தனர்.

 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories