SA vs IND: சுத்து போட்ட டீம் இந்தியா, சிறப்பான சம்பவம் செய்த சிராஜ் – 55 ரன்களுக்கு காலியான தென் ஆப்பிரிக்கா!

First Published | Jan 3, 2024, 4:22 PM IST

இந்தியாவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்துள்ளது.

South Africa vs India 2nd Test, Cape Town

தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 32 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதையடுத்து இந்த 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

South Africa vs India 2nd Test, Cape Town

கேப்டவுனில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரர்கள் எய்டன் மார்க்ரம் 2, கேப்டன் டீன் எல்கர் 4, டோனி டி ஜோர்ஸி 4, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 3 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Tap to resize

South Africa vs India 2nd Test, Cape Town

அடுத்து வந்த டேவிட் பெடிங்காம் மற்றும் கேப்டன் கைல் வெர்ரேனே ஓரளவு தாக்குபிடித்த நிலையில் இருவருமே சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தனர். டேவிட் 12 ரன்னும், கைல் 15 ரன்னும் எடுத்தனர்.

South Africa vs India 2nd Test, Cape Town

அடுத்து வந்த மார்கோ ஜான்சென் 0, கேசவ் மகாராஜ் 3, கஜிசோ ரபாடா 5, நந்த்ரே பர்கர் 4 என்று வரிசையாக ஆட்டமிழக்கவே கடைசியாக தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Siraj 6 Wickets against SA in 2nd Test

இதன் மூலமாக தென் ஆப்பிரிக்கா 3ஆவது முறையாக குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்துள்ளது. இதற்கு முன்னதாக 79 (2015 ஆம் ஆண்டு) மற்றும் 84 (2006 ஆம் ஆண்டு) ரன்கள் எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோராக இருந்துள்ளது.

South Africa vs India 2nd Test, Cape Town

இதில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 9 ஓவர்கள் வீசி 3 மெய்டன் உள்பட 15 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

Mohammed Siraj Take 6 Wickets First Time Against SA

ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். சிராஜின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

South Africa vs India 2nd Test, Cape Town

இந்தியாவிற்கு எதிராக குறைந்தபட்ச ரன்களில் ஆட்டமிழந்த அணிகள்:

55 – தென் ஆப்பிரிக்கா, கேப் டவுன், 2024

62 – நியூசிலாந்து, மும்பை, 2021

79 - தென் ஆப்பிரிக்கா, நாக்பூர், 2015

81 – இங்கிலாந்து, அகமதாபாத், 2021

82 - இலங்கை, சண்டிகர், 1990

South Africa vs India 2nd Test, Cape Town

குறைவான ரன்கள் கொடுத்து அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர்கள்:
 

5/7 – ஜஸ்ப்ரித் பும்ரா vs வெஸ்டி இண்டீஸ், நார்த் சவுண்ட், 2019

6/12 – வெங்கடபதி ராஜூ vs இலங்கை, சண்டிகர், 1990

5/13 – ஹர்பஜன் சிங் vs வெஸ்டி இண்டீஸ், கிங்ஸ்டன், 2006

6/15 – முகமது சிராஜ் vs தென் ஆப்பிரிக்கா, கேப் டவுன், 2024

5/18 – சுபாஷ் குப்தே vs பாகிஸ்தான், டாக்கா, 195

South Africa vs India 2nd Test, Cape Town

தென் ஆப்பிரிக்கா அணியில் முதல் 4 வீரர்களும், பின்வரிசையில் 4 வீரர்களும் ஒற்றைப்படை ரன்களில் ஆட்டமிழந்துள்ளனர்.

South Africa vs India 2nd Test, Cape Town

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியில் கைல் வெர்ரேனே அதிகபட்சமாக 15 ரன்கள் எடுத்துள்ளார். மற்றொரு வீரர் டேவிட் பெடிங்காம் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Latest Videos

click me!