டி20 உலகக் கோப்பையில் விளையாட ஆர்வம் காட்டும் ரோகித் அண்ட் கோலி – பிசிசிஐ நியூ பிளான்!

First Published | Jan 3, 2024, 9:14 AM IST

வரும் ஜூன் மாதம் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் விளையாட ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Rohit Sharma

கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. அதன்படி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே டி20 போட்டிகளில் விளையாட தவிர்த்து வந்தனர்.

Virat Kohli T20I

இதையடுத்து கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை வந்து தோல்வியோடு திரும்பியது. இதன் காரணமாக ரோகித் சர்மா, விராட் கோலி இருவருமே ஒருநாள் தொடர்களில் சிறிது காலம் ஓய்வு தேவை என்று ஒதுங்கினர்.

Tap to resize

Rohit Sharma T20I Matches

இதன் காரணமாக இருவரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். மேலும், இருவரும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்று விளையாடி வருகின்றனர்.

Rohit Sharma Captain T20I World Cup 2024?

இந்த ஆண்டின் முதல் டெஸ்ட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கேப் டவுனில் நடக்கிறது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்க இருக்கிறது.

Rohit and Virat Kohli

இதற்கு முன்னதாக, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் விளையாட இருக்கிறார்களா? என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்க ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியை அறிவிக்க இருக்கிறது.

Virat Kohli T20I Matches

தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது போட்டியில் விளையாடி வரும் ரோகிர்த் சர்மா, தனக்கு டி20 உலகக் கோப்பையில் கேப்டன் பொறுப்பு கொடுத்தால் அதனை ஏற்றுக் கொண்டு விளையாட விரும்புவதாக கூறியிருக்கிறார்.

Rohit Sharma and Virat Kohli

இதைத் தொடர்ந்து விராட் கோலியும் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க ஆர்வம் காட்டியிருக்கிறார். ஏற்கனவே இதுவரையில் அவர் டி20 போட்டிகளில் பங்கேற்காத நிலையில், அவரது இடத்திற்கு ஷ்ரேயாஸ் ஐயரை தயார் செய்து வருகின்றனர். அப்படியிருக்கும் போது தற்போது விராட் கோலியும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.

T20I World Cup 2024

ஏற்கனவே முன்னாள் வீரர்களும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் டி20 போட்டிகள் எதிர்காலத்த கருத்தில் கொள்ள வேண்டும் என்று குரல் எழுப்பியிருந்தனர். இந்த நிலையில் தான் தேர்வுக் குழு தலைவரான அஜித் அகர்கர் மற்றும் 2 குழு உறுப்பினர்களுடன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அவரச ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

T20I World Cup 2024

இந்த ஆலோசனைக்கு பிறகே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட ஆர்வம் காட்டிய நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rohit Sharma Ready to T20I World Cup 2024

ஏற்கனவே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகிய நிலையில் ரோகித் அண்ட் கோலி இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

Virat Kohli Ready to Play T20I World Cup 2024

ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான இந்திய அணி எதிர்பார்ப்பு:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி அல்லது ஹர்திக் பாண்டியா.

Latest Videos

click me!