Rohit Sharma
இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இடம் பெறாமல் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இடம் பெற்று விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில் அந்த தொடரில் ரோகித் சர்மா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Rohit Sharma
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஆண்டு 26 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி முடிந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் இன்னிங்ஸில் 5 ரன்னும், 2ஆவது இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்.
Rohit Sharma Test Hundred
இந்த நிலையில் தான் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசினார். அதே போன்று இந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது.
Rohit Sharma
இதில் முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா 212 பந்துகளில் 15 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 120 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
SA vs IND 2nd Test Cape Town
இதே போன்று நாளை நடக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் மூலமாக 2024 ஆம் ஆண்டை தொடங்குகிறது. 2024 ஆம் ஆண்டில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்தப் போட்டியிலும் ரோகித் சர்மா சதம் அடித்து அணியை வெற்றி பெறச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.