Mumbai Indians Captain: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகும் ஜஸ்ப்ரித் பும்ரா?

First Published | Jan 2, 2024, 1:13 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

MI Captain

ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடந்தது. இதில், ஆஸ்திரேலியா வீரர்களான மிட்செல் ஸ்டார் அதிகபட்சமாக ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வாங்கப்பட்டார். பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு வாங்கப்பட்டார்.

mumbai indians

ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாகவே டிரேட் முறையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாங்கப்பட்டார். அதன் பிறகு அவர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இது ரோகித் சர்மா மற்றும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதன் காரணமாக சமூக வலைதளங்களில் அந்த அணியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

Tap to resize

Hardik Pandya

உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா கணுக்கால் காயம் ஏற்பட்ட நிலையில் தொடரிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா தொடர் என்று எதிலும் இடம் பெறவில்லை. இன்னும் ஓரிரு வாரங்களில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது.

Mumbai Indians

இதிலிருந்தும் ஹர்திக் பாண்டியா விலகியதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாடுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், அவருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மாவிற்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் அடுத்த டார்க்கெட் என்னவோ சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா பக்கம் திரும்பியிருக்கிறது.

Mumbai Indians Next Captain

ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் காயம் அடைந்த நிலையில், அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா கேப்டனாக செயல்பட்டார். இதன் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  

Jasprit Bumrah

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக இருந்துள்ளார். இந்திய அணியின் டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாகவும் இருக்கிறார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே இடம் பெற்று விளையாடி வருகிறார். ஆதலால், பும்ரா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Latest Videos

click me!