
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 17ஆவது சீசன் வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐபிஎல்லில் போட்டியின் நிலை உயர்ந்துள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் உடற்தகுதி ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது.
உடற்தகுதி எப்போதும் இல்லாத அளவில் இருக்கும் வகையில் ஒவ்வொரு அணியும் வீரர்களை கொண்டிருக்க வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணியைப் போன்று 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா, டுவைன் பிராவோ ஆகியோர் உடற் தகுதியில் சிறந்த வீரர்களாகவே இருந்தனர்.
இவர்கள் இருவரும் ஒரு பேட்ஸ்மேன்களாக சிறந்தவர்களாகவும், பீல்டிங்கிலும் சிறப்பானவர்களாகவும் அறியப்பட்டனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிரான் பொல்லார்டு போன்ற ஒரு ஆல் ரவுண்டரும் இருந்தார். விளையாட்டில் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் கொடுத்தார். உடல்தகுதியை பொறுத்தவரையில் சிறப்பானவராக இருந்தார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐபிஎல்லில் போட்டியின் நிலை உயர்ந்துள்ளது. ஒவ்வொரு அணிக்கும் உடற்தகுதி ஒரு முக்கியமான அம்சமாகும். வரவிருக்கும் ஐபிஎல் சீசனில், இது மீண்டும் ஒரு முக்கிய காரணியாக இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றிருக்கும் ஃபிட்னஸ் அடிப்படையில் சிறந்த வீரர்கள் யார் என்று பார்க்கலாம்….
ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா பற்றி அறிமுகம் தேவையில்லை. பீல்டிங், பவுலிங், பேட்டிங்கில் தன்னை ஒரு சிறந்த வீரர் என்று காட்டி வருகிறார். கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியனாக இவரே காரணம். உடல் தகுதிக்கு இவரை மிஞ்சியவர் எவரும் இல்லை என்றே சொல்லலாம்.
ஜோஸ் பட்லர்
கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தவர் ஜோஸ் பட்லர். இங்கிலாந்து வீரரான பட்லர், ஒரு பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக ஆர் ஆர் அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார். சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக இருப்பதால், பட்லர் பீல்டிங்கில் கலக்கி வருகிறார்.
குயீண்டன் டி காக்
தென் ஆப்பிரிக்காவின் விக்கெட் கீப்பரான குயீண்டன் டி காக் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். 2022 ஆம் ஆண்டு அணியில் இடம் பெற்றது முதல் சிறப்பாக விளையாடி வருகிறார். ஃபிட்னஸ் அடிப்படையில் களத்தில் பேட்டிங்க் செய்வது முதல் பீல்டிங்கிலும் கலக்கி வருகிறார்.
ரிங்கு சிங்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிறந்த வீரராக மாறி இருப்பவர் ரிங்கு சிங். ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறந்த ஃபினிஷராக இருக்கிறார். 26 வயதாகும் ரிங்கு சிங் தனது சிறப்பான பேட்டிங் அணுகுமுறையால் இந்திய அணியில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.
ரஷீத் கான்
குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கியமான லெக் பிரேக் ஸ்பின்னர். 2021 ஆம் ஆண்டு வரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றார். உடல் தகுதி அடிப்படையில் கடந்த 6 வருடங்களாக ஐபிஎல் வாழ்க்கையில் சிறந்த வீரராக திகழ்கிறார்.
பாப் டூபிளெசிஸ்
உடற்தகுதி குறித்து அறிமுகம் தேவையில்லை. அவர் நல்ல உடலமைப்பு மற்றும் மிகவும் கவனத்தை ஈர்க்கும் உளி வயிறு. அவரது சிறந்த உடல் அவரது நம்பிக்கையை உயர்வாக வைத்திருக்கிறது மற்றும் கடினமான உடல் பணிகளை எளிதாக செய்ய அனுமதிக்கிறது.
சூர்யகுமார் யாதவ்
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ்வின் உடல் வலிமை டி20 கிரிக்கெட்டில் அவரை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.
டிராவிஸ் ஹெட்
உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் டிராவிஸ் ஹெட். இவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.6.8 கோடிக்கு ஏலம் எடுத்தது. உலகக் கோப்பையில் இடம் பெற்று விளையாடிய ஹெட் 6 போட்டிகளில் 329 ரன்கள் குவித்துள்ளார்.
டேவிட் வார்னர்
ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் கடந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்தினார். இந்த இரண்டு ஆண்டுகளில், அவர் தனது பேட் மூலம் கண்ணியமாக இருந்தார். வார்னருக்கு 37 வயதாகிறது, ஆனால் அவரது வயது முதிர்ச்சி அவரை எதிர்மறையாக பாதிக்கவில்லை. எனினும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நாளை நடக்க இருக்கும் சிட்னி டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
ஷிகர் தவான்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் முக்கியமான வீரர் ஷிகர் தவான். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். அவருக்கு வயது 38. ஆனால் உடற்தகுதி விஷயத்தில் சமரசம் செய்து கொள்வதில்லை. முந்தைய இரண்டு சீசன்களில், தவான் ஒரு தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக செயல்பட்டார், இரண்டு சீசன்களிலும் அணிக்காக அதிக ரன் எடுத்துள்ளார்.