ரவீந்திர ஜடேஜா, முகேஷ் குமார் அணியில் இடம் பெற வேண்டும் – இர்பான் பதான்!

First Published | Jan 1, 2024, 2:56 PM IST

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், 2ஆவது போட்டி வரும் 3 ஆம் தேதி கேப்டவுனில் நடக்க இருக்கிறது.

India vs South Africa 2nd Test

தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரை முடித்துக் கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்று முன்னிலையில் உள்ளது. செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

India South Africa Tour

இதையடுத்து, 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 3 ஆம் தேதி கேப்டவுனில் நடக்க இருக்கிறது. கேப்டவுனில் விளையாடிய 6 போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை.

Tap to resize

SA vs IND Cape Town Test

4 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. மேலும், 2 போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதே போன்று கேப்டவுனில் தென் ஆப்பிரிக்கா 59 டெஸ்ட் போட்டிகளில் 27ல் வெற்றி பெற்றுள்ளது. 21ல் தோல்வி அடைந்துள்ளது. 11 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

Rohit Sharma

இதுவரையில் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் ஒன்றில் கூட இந்திய அணி வெற்றி பெற்றதில்லை. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், 2ஆவது போட்டியில் வெற்றி பெற தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

South Africa vs India 2nd Test

இந்த நிலையில், தான் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Team India

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: முதல் டெஸ்ட் போட்டியில் முதுகு பிடிப்பு காரணமாக இடம் பெறாத ஜடேஜா உடல் தகுதியோடு இருந்தால் கண்டிப்பாக 2ஆவது போட்டியில் இடம் பெற வேண்டும்.

Jadeja

முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்று விளையாடினார். ஆனால், பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட சிறப்பாக பந்து வீசியிருக்கிறார். ஆனால், கண்டிப்பாக ஜடேஜா இடம் பெற வேண்டும்.

SA vs IND 2nd Test

பேட்டிங்கில் பின் வரிசையில் இந்திய அணி தடுமாறி வருகிறது. ஆதலால், 6ஆவது அல்லது 7ஆவது வரிசையில் களமிறங்கி விளையாட இந்திய அணிக்கு ஜடேஜா தேவை. அவர் இடம் பெற்று விளையாடினால் கூடுதலாக ரன் சேர்க்க முடியும்.

Ravindra Jadeja

ஆதலால், அவரை கண்டிப்பாக அணியில் சேர்ப்பார்கள். அணியில் மாற்றம் வேண்டுமென்றால், பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக முகேஷ் குமாரை அணியில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Latest Videos

click me!