மலைகளுக்கு நடுவில் மைதானம்; மழைக்கு வாய்ப்பில்லை, 5 நாட்களும் போட்டி சக்ஸஸ்புல்லா நடக்கும்!

First Published | Jan 2, 2024, 4:06 PM IST

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

SA vs IND 2nd Test Match

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதன் பலனாக தென் ஆப்பிரிக்கா 32 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SA vs IND 2nd Test, Cape Town

இதுவரையில் இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரில் கூட வென்றதில்லை என்று கூறப்பட்ட நிலையில் இந்த முறையும் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சரி, டெஸ்ட் தொடரை சமன் செய்வதற்கு கடைசி வாய்ப்பாக நாளை நடக்கும் கேப்டவுன் டெஸ்ட் போட்டி அமைந்துள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Tap to resize

South Africa vs India Test

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மலைகளுக்கு நடுவில் காட்சி தரும் இந்த மைதானத்தில் இதுவரையில் 59 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளது. இதில், தென் ஆப்பிரிக்கா 27 வெற்றிகளையும், 21 தோல்விகளையும் அடைந்ததோடு, 7 போட்டிகளை டிராவும் செய்துள்ளது.

Cape Town Test

ஆனால், இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மேலும், 2 போட்டிகளை டிராவும் செய்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியானது மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டியும் மழையால் பாதிகப்பட கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Cape Town Weather Report

ஆனால் 5 நாட்களும் மழைக்கான வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் கூறியதாக தகவல் வெளியாகியிக்கிறது. ஆகையால், இந்த 5 நாட்களும் போட்டியானது மழையால் பாதிப்பில்லாமல் நடக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.

Capetown Test

செஞ்சூரியன் மைதானத்தைப் போன்று இந்த மைதானமானது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானம் என்று சொல்லப்படுகிறது. மேலும், மலைப்பகுதிகளுக்கு நடுவில் மைதானம் இருப்பதால், காற்றின் வேகம் இருக்க கூடும்.

SA vs IND 2nd Test

இதனால், சுழற்பந்து வீச்சாளர்களும் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றலாம். ஆதலால் பேட்ஸ்மேன்கள் அதிக கவனத்துடன் களமிறங்கி விளையாடுவது அவசியமாகும். இந்திய அணியானது இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Latest Videos

click me!