ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!

Published : Dec 07, 2025, 02:59 PM IST

பலாஷ் முச்சலுடன் நடைபெற இருந்த தன்னுடைய திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஸ்மிருதி மந்தனா இன்று தெரிவித்துள்ளார். இதற்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

PREV
14
ஸ்மிருதி மந்தனா திருமணம் திடீர் நிறுத்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் கடந்த மாத இறுதியில் நடைபெற இருந்த திருமணம் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை சீனிவாஸுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தந்தையின் உடல்நிலை குணமாகும் வரை திருமணம் வேண்டாம் என ஸ்மிருதி மந்தனா முடிவெடுத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

24
என்ன நடந்தது?

ஆனால் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டதற்கு தந்தையின் உடல்நலக்குறைவு காரணம் இல்லை என்றும் வேறு காரணம் எனவும் கூறப்பட்டது. அதாவது பலாஷ் முச்சல் வேறு சில பெண்களுடன் பேசிய ஆடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகின. இதன் காரணமாக திருமணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. திருமணம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு இது தொடர்பாக இருவரும் ஏதும் பேசவில்லை. இதனால் என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்து வந்தது.

34
திருமணம் ரத்து

இந்த நிலையில், பலாஷ் முச்சலுடன் நடைபெற இருந்த தன்னுடைய திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஸ்மிருதி மந்தனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்மிருதி மந்தனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''கடந்த சில வாரங்களாக எனது வாழ்க்கையைப் பற்றி பலவிதமான ஊகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

இந்த நேரத்தில் நான் வெளிப்படையாக பேச வேண்டியது முக்கியம். நான் மிகவும் தனிப்பட்ட வாழ்க்கையை விரும்புபவள். அதை நான் அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இங்கேயே முடித்துக் கொள்ள விரும்புகிறேன்

இந்த விஷயத்தை இங்கேயே முடித்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் அவ்வாறே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் இரு குடும்பங்களின் தனியுரிமையையும் மதித்து, எங்கள் சொந்த வேகத்தில் செயலாக்க மற்றும் முன்னேற எங்களுக்கு இடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நம் அனைவரையும் இயக்கும் ஒரு உயர்ந்த நோக்கம் இருப்பதாக நான் நம்புகிறேன்.

44
இந்தியாவுக்காக தொடர்ந்து விளையாடுவேன்

எனக்கும், அது எப்போதும் என் நாட்டை மிக உயர்ந்த மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முடிந்தவரை நீண்ட காலம் இந்தியாவுக்காக விளையாடி கோப்பைகளை வெல்வேன் என்று நம்புகிறேன். அங்குதான் எனது கவனம் என்றென்றும் இருக்கும். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி. முன்னேற வேண்டிய நேரம் இது'' என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories