IPL 2025: ஐபிஎல் 2024ல் தோல்வி –கேப்டன் பதவியை இழக்க கூடிய 3 இளம் வீரர்கள் யார் யார்? இளவரசனும் இழக்க வாய்ப்பு

First Published | Sep 8, 2024, 9:22 PM IST

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக அணிகளில் பல மாற்றங்கள் நிகழ உள்ளன. குறிப்பாக சில அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது. தங்கள் அணியின் கேப்டன்களை மாற்றவும் வாய்ப்புகள் இருக்கிறது.

Gujarat Titans, IPL 2025

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில் தலைமையிலான அணியானது 14 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 8ஆவது இடம் பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பு இழந்து வெளியேறியது. இந்த நிலையில் தான் இந்த தோல்வி காரணமாக 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கில் நீக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஐபிஎல் வட்டாரத்தில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.

Shubman Gill

ஐபிஎல் 2025க்கான மெகா ஏலத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் ஐபிஎல் ஏலம் நடைபெற இருக்கிறது. இதில் சீனியர் வீரர்கள் முதல் இளம் வீரர்கள் வரையில் அனைவரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது. ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்பது குறித்து பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Tap to resize

Gujarat Titans - Shubman Gill

எனினும், அணியின் உரிமையாளர்கள் குறைந்தது 4 முதல் 6 வீரர்கள் வரையில் தக்க வைக்க அனுமதி கோருகின்றனர். அதே நேரத்தில் ஒவ்வொரு அணியும் தங்களது அணியின் கேப்டன்களை மாற்றவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஐபிஎல் 2025க்கு முன் கேப்டனாக இருக்கும் 3 இளம் வீரர்களை இங்கே பார்க்கலாம்.

Sam Curran, Punjab Kings

சாம் கரண்:

இங்கிலாந்து அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான சாம் கரண், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். ஷிகர் தவான் கேப்டனாக இருந்து காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அவருக்குப் பதிலாக அணியின் கேப்டனாக சாம் கரண் தான் செயல்பட்டார். எனினும், அவருக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியானது ரோகித் சர்மாவிற்கு வலைவீசியது.

வரும் ஏலத்தில் ரோகித் சர்மா பங்கேற்றால் அவரை ஏலத்தில் வாங்க பஞ்சாப் கிங்ஸ் அணியானது ரெடியாக இருக்கும். இதுவரையில் ஒரு முறை கூட டிராபி கைப்பற்றாத அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஒன்று.

Shubman Gill

சுப்மன் கில்:

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அண்யின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா டிரேட் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றார். அங்கு அவருக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்றார். கேப்டனாக பொறுப்பேற்ற கில் தலைமையிலான அணியானது ஒவ்வொரு வெற்றிக்காகவும் துடித்தது. இந்த தொடரில் குஜராத் விளையாடிய 14 போட்டிகளில் 5ல் மட்டுமே வெற்றி பெற்றது.

பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து லீக் சுற்று போட்டிகளுடன் வெளியேறியது. அதோடு புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடம் பிடித்தது. இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு வீரரை ஏலத்தில் எடுத்து கில்லின் கேப்டன் பொறுப்பை பறிக்க குஜராத் தீவிரமாக உள்ளதாக ஐபிஎல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

Faf du Plessis, Royal Challengers Bengaluru, IPL 2025

ஃபாஃப் டு பிளெசிஸ்:

ஐபிஎல் 2022க்கு முன்னதாக ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். அதன் பிறகு ஃபாஃப் டு பிளெசிஸ் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால், இவரது தலைமையிலான ஆர்சிபி அணியானது ஒரு முறை கூட டிராபி கைப்பற்றவில்லை. 3 சீசன்களாக தோல்வியை தழுவினார்.

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஆர்சிபி கேப்டன் பொறுப்பிலிருந்து டூ பிளெசிஸ் நீக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு எப்படியும் டிராபியை கைப்பற்ற வேண்டும் என்பதாக புதிய கேப்டனை தேடும் வேலையில் ஆர்சிபி தீவிரம் காட்டி வருகிறது.

Latest Videos

click me!