UP T20 League: 4 ஓவர்களில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து பேட்ஸ்மேன்களை மிரட்டிய புவிக்கு வாய்ப்பு கிடைக்குமா?

First Published | Sep 8, 2024, 6:39 PM IST

Bhuvneshwar Kumar: இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், UP T20 லீக்கில் லக்னோ அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்திய போட்டியில் 4 ஓவர்கள் வீசி 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தினார். 24 பந்துகளில் 20 டாட் பந்துகள் வீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

Bhuvneshwar Kumar

UP T20 League, Bhuvneshwar Kumar: தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி உத்தரபிரதேச டி20 கிரிக்கெட் லீக் தொடங்கியது. யுபி டி20 லீக் எனப்படும் இந்த தொடரில் காசி ருத்ராஸ், மீராட் மாவெரிக்ஸ், கோரக்பூர் லயன்ஸ், நொய்டா சூப்பர் கிங்ஸ், லக்னோ ஃபால்கன்ஸ், கான்பூர் சூப்பர்ஸ்டார்ஸ் என்று மொத்தமாக 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.

Lucknow Falcons, 2024 Uttar Pradesh T20,

Lucknow Falcons: யுபி டி20 லீக் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரும் இடம் பெற்று விளையாடி வருகிறார். அவர், லக்னோ ஃபால்கன்ஸ் அணிக்காக விளையாடி வரும் புவி, தனது ஆக்ரோஷமான பந்து வீச்சால் எதிரணி வீரர்களை வியக்க வைத்துள்ளார். தற்போது 34 வயதாகும் புவி, லக்னோ அணிக்காக 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 4 ரன்கள் மட்டுமே கொடுத்து பேட்ஸ்மேன்கள அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார். எனினும் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.

Latest Videos


2024 Uttar Pradesh T20,

புவி வீசிய 24 பந்துகளில் 20 டாட் பந்துகள். அதாவது 20 பந்துகளில் புவி ஒரு ரன் கூட கொடுக்கவில்லை. மீதமுள்ள 4 பந்திலும் தலா ஒரு ரன் கிடைத்து மொத்தமாக 4 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் தற்போது UP T20 லீக்கில் விளையாடி வருகிறார். இந்த லீக் தொடரின் 25வது போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது.

UP T20 League,

இந்தப் போட்டியில் லக்னோ ஃபால்கன்ஸ் மற்றும் காஷி ருத்ராஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் புவி தனது அற்புதமான பந்து வீச்சின் மூலமாக அனைவரது இதயங்களையும் கொள்ளை கொண்டார். இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 24 பந்துகளில் 20 பந்துகள் டாட் பந்துகள். அதாவது 20 பந்துகளில் ஒரு ரன் கூட கொடுக்கவில்லை.

எஞ்சிய 4 பந்திலும் தலா ஒரு ரன் மட்டுமே கொடுத்துள்ளார். பவுண்டரியோ, சிக்ஸரோ அடிக்கவிடவில்லை. மொத்தமாக 4 ஓவர்களில் ஒரு மெய்டன் உள்பட 4 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.

Uttar Pradesh T20 League,

புவனேஷ்வர் குமாரின் அபார பந்து வீச்சால் காசி ருத்ராஸ் அணியானது 20 ஓவர்களி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய லக்னோ 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.

இதே போன்று 5ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் கோரக்பூர் அணிக்கு எதிராக 3 ஓவர்கள் வீசிய புவி 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆனால், இந்தப் போட்டியில் கோரக்பூர் லயன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் புவனேஷ்வர் குமார், 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 63 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

Bhuvneshwar Kumar Best Bowling

121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 141 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும், 77 டி20 போட்டிகளில் விளையாடி 84 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். கடைசியாக 2022 ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இடம் பெற்று விளையாடினார். 2018 ஜனவரியில் தனது கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடினார். மேலும், 2022 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் புவி இடம் பெறவில்லை.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் புவி கடைசி 3 சீசன்களில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. ஆதலால், புவனேஷ்வர் குமாருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதில் சந்தேகம் தான்.

click me!