Shreyas Iyer House: மாத வாடகை மட்டும் இத்தனை லட்சமா.? இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் லக்ஸரி வீட்டை பார்த்தீங்களா

Published : Jun 13, 2026, 03:37 PM IST

Shreyas Iyer House: இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், மும்பையில் மாதம் ரூ.18.50 லட்சம் வாடகைக்கு வீடு எடுத்துள்ளார். தற்போது இந்த லக்ஸரி அப்பார்ட்மென்ட் வைரலாகி வருகிறது.

PREV
15
ஸ்ரேயாஸ் ஐயரின் வீடு

இந்தியாவின் புதிய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள 'ஆர்டீசியா' என்ற பிரமாண்ட குடியிருப்பில் வசிக்கிறார். சுமார் 3,875 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த அப்பார்ட்மென்ட்டின் மாத வாடகை மட்டும் ரூ.18.50 லட்சம் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

25
ரூ.7 கோடியை தாண்டும் வாடகை ஒப்பந்தம்

மூன்று ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தத்தின் கீழ், ரூ.74 லட்சம் பாதுகாப்புத் தொகையாக செலுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் 7% வாடகை உயர்வு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தமாக சுமார் ரூ.7.14 கோடி வாடகையாக செலுத்தப்படவுள்ளது. இந்த வீட்டுடன் நான்கு கார் பார்க்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

35
சரிவிலிருந்து சிகரத்துக்கு

2024-ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிகளில் பங்கேற்காத காரணத்தால், BCCI-யின் மத்திய ஒப்பந்தத்தை ஸ்ரேயாஸ் ஐயர் இழந்தார். பின்னர் டி20 உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை அணிகளிலும் இடம் கிடைக்கவில்லை. காயங்களும் அவரது பயணத்தை கடினமாக்கின.

45
வார்த்தைகளால் அல்ல, பேட்டால் பதிலடி

விமர்சனங்களுக்கு சமூக வலைதளங்களில் பதிலளிக்காமல், தனது ஃபிட்னஸ் மற்றும் பேட்டிங்கில் கவனம் செலுத்தினார். ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்திய தலைமைத்துவமும், தொடர்ச்சியான செயல்பாடுகளும் தேர்வாளர்களின் நம்பிக்கையை மீட்டுத் தந்தன.

55
கம்பேக் கதையின் புதிய உச்சம்

சுமார் 30 மாத டி20 அணிக்கு வெளியே இருந்த ஒருவர், மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக திரும்பியது சாதாரண சாதனையல்ல. இன்று ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் கேப்டன் மட்டுமல்ல, தடைகளைத் தாண்டி நிற்கும் தன்னம்பிக்கையின் அடையாளமாகவும் மாறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories