முக்கி தக்கி முதல் விக்கெட்டை போட்ட இந்தியா..! பவுலர்களால் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய ஷ்ரேயாஸ் வீடியோ

First Published | Nov 29, 2020, 11:25 AM IST

இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்துவரும் 2வது ஒருநாள் போட்டியிலும், முதல் போட்டியை போலவே வார்னரும் ஃபின்ச்சும் இணைந்து மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
 
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களத்திற்கு வந்த ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் வார்னரும் ஃபின்ச்சும் இணைந்து, முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். வார்னர் அதிரடியாக ஆடி அரைசதம் அடிக்க, அவரது பார்ட்னரும் கேப்டனுமான ஃபின்ச்சும் அவரைத்தொடர்ந்து அரைசதம் அடித்தார்.
Tap to resize

Latest Videos

click me!