#AUSvsIND தம்பி நீங்க கிளம்புங்க; ஆஸி., அணியில் அதிரடி மாற்றம்! நம்ம ஆளுங்க செம கெத்து! ஆஸி., முதலில் பேட்டிங்

First Published Nov 29, 2020, 9:13 AM IST

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று நடக்கிறது.
undefined
சிட்னியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
undefined
கடந்த போட்டியில் அபார வெற்றி பெற்ற போதிலும் ஆஸ்திரேலிய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்கஸ் ஸ்டோய்னிஸுக்கு சிறு காயம் என்பதால் அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
undefined
ஆஸ்திரேலிய அணி:டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், க்ளென் மேக்ஸ்வெல், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா.
undefined
இந்திய அணி முதல் போட்டியில் தோற்றிருந்தாலும், ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடன் தான் இந்த போட்டியிலும் ஆடுகிறது.
undefined
இந்திய அணி:ஷிகர் தவான், மயன்க் அகர்வால், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, சைனி, ஷமி, சாஹல், பும்ரா.
undefined
click me!