Vaibhav Suryavanshi: அறிமுகப் போட்டியிலேயே இப்படியா? அயர்லாந்து ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவதில் சிக்கல்? ரசிகர்கள் ஷாக்!

Published : Jun 12, 2026, 02:54 PM IST

india vs ireland 2026: அயர்லாந்தில் தற்போது நிலவி வரும் உள்நாட்டு கலவரம் காரணமாக அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக லிஸ்பர்ன் நகரில் நடக்கவிருந்த இன்டர்-புரோவின்ஷியல் டி20 திருவிழா ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுவிட்டது.

PREV
15
வைபவ் சூர்யவன்ஷி

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்கான இந்திய சீனியர் டி20 அணியில் இடம்பிடித்துள்ள 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் பற்றி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்திய சீனியர் டி20 அணியில் இடம்பிடித்த மிக இளம் வயது வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இவர் ஏற்கெனவே முறியடித்துவிட்டார். தற்போது சூர்யவன்ஷி, இந்தியா 'ஏ' அணியுடன் இலங்கையில் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார். இந்த மாத இறுதியில் அயர்லாந்தில் நடக்கும் போட்டியில் அவர் சீனியர் அணிக்காக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25
அறிமுக போட்டியில் விளையாடுவதில் சிக்கல்

ஆனால், அறிமுக போட்டியில் அவர் விளையாடுவதில் இப்போது ஒரு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. அயர்லாந்தில் தற்போது நிலவி வரும் உள்நாட்டு கலவரம் காரணமாக அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக லிஸ்பர்ன் நகரில் நடக்கவிருந்த இன்டர்-புரோவின்ஷியல் டி20 திருவிழா ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற வேண்டிய ஐரிஷ் சீனியர் கோப்பை மற்றும் நேஷனல் கோப்பை போட்டிகள் குறித்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என்று 'அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் ' அறிக்கையில் தெரிவித்துள்ளது

35
இந்தியா-அயர்லாந்து போட்டி சிக்கல்

அங்கு நிலைமை சீரடையவில்லை என்றால் இந்தியா-அயர்லாந்து டி20 தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அப்படி இல்லை என்றால் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

45
பேட்டிங் ஸ்டைலை மாற்றிய சூர்யவன்ஷி

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிக்ஸர் மழை பொழிந்து அதிரடி காட்டிய வைபவ் சூர்யவன்ஷி, இந்தியா 'ஏ' அணிக்கான ஒருநாள் போட்டிகளில் முற்றிலும் மாறுபட்ட ஒரு பேட்டிங் ஸ்டைலைக் கடைப்பிடிக்கிறார். கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிக்கு எதிராக நடந்த போட்டியில், ஆட்டமிழக்கும் முன் சூர்யவன்ஷி 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், இந்த இன்னிங்ஸில் ஒரு சிக்ஸர் கூட இல்லை.

55
ஆப்கானிஸ்தான் எதிரான போட்டியில் தோல்வி

ஐபிஎல் தொடரில் தனது பெரும்பாலான ரன்களை சிக்ஸர்கள் மூலமாகவே எடுத்த இந்த 15 வயது வீரர், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கிரவுண்ட் ஷாட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மிகவும் கவனமாக பேட் செய்தார். இருப்பினும், சூர்யவன்ஷியின் இந்த சிறப்பான ஆட்டம் கூட ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 'ஏ' அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.

Read more Photos on
click me!

Recommended Stories