மின்னல் வேக அரைசதம்; வான்கடேவில் ருத்ரதாண்டவம் ஆடிய ஹெட்மயர்!

Published : Feb 23, 2026, 11:28 PM IST

Shimron Hetmyer Fastest T20 World Cup Fifty: டி20 உலகக் கோப்பையில் ஷிம்ரோன் ஹெட்மயர் தனது அதிரடி பேட்டிங்கால் ஜிம்பாப்வேயை துவம்சம் செய்தார். வெறும் 19 பந்துகளில் அரைசதம் அடித்து கெய்ல் சாதனையை முறியடித்தார்.

PREV
15
ஹெட்மயர் : மும்பையில் ரன் சுனாமி

மும்பை வான்கடே மைதானத்தில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மயர் ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். 250.00 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய அவர், தனது அதிரடியால் மைதானத்தை அதிர வைத்தார்.

25
ஹெட்மயர் : 34 பந்தில் 85 ரன்கள்.. 14 முறை பவுண்டரிக்கு சென்ற பந்து

இந்த போட்டியில் 34 பந்துகளைச் சந்தித்த ஹெட்மயர் 85 ரன்கள் குவித்தார். இதில் 7 ஃபோர்கள், 7 சிக்ஸர்கள் அடங்கும். 9 ரன்களில் கிடைத்த லைஃபிற்கு பிறகு, ஜிம்பாப்வே பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

35
கெய்ல் சாதனையை முறியடித்து... தனது சாதனையை தானே தகர்த்த ஹெட்மயர்

இந்த இன்னிங்ஸ் மூலம், டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிவேக அரைசதம் அடித்த தனது சொந்த சாதனையை ஹெட்மயர் முறியடித்தார். 19 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய வரலாறு படைத்தார்.

45
யூனிவர்ஸ் பாஸ்-இன் சத சாதனை தப்பியது

ஹெட்மயரின் ஆட்டத்தைப் பார்த்தபோது, கெய்லின் அதிவேக சத சாதனையை (47 பந்துகள்) முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 85 ரன்களில் ஆட்டமிழந்ததால், அந்த உலக சாதனை நூலிழையில் தப்பியது.

55
சிக்ஸர் கிங்: நிக்கோலஸ் பூரன் சாதனையை சமன் செய்த ஹெட்மயர்

அரைசத சாதனை மட்டுமல்ல, ஒரே டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த நிக்கோலஸ் பூரனின் (17) சாதனையையும் ஹெட்மயர் சமன் செய்தார். கெய்லின் (16 சிக்ஸர்கள்) சாதனையையும் முறியடித்தார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories