Published : Oct 19, 2024, 11:22 AM ISTUpdated : Oct 19, 2024, 12:39 PM IST
Sarfaraz Khan Maiden Test Hundred: ஒரே போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் சதம் அடித்து சாதனை படைத்தவர்களின் பட்டியலில் 10ஆவது வீரராக சர்ஃபராஸ் கான் படைத்துள்ளார்.
India vs New Zealand, Sarfaraz Khan Maiden Century
Sarfaraz Khan Maiden Test Hundred : தோற்றுவிடக் கூடாது என்பதற்காக முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் எடுத்த இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் சிறப்பாகவும், அதே நேரத்தில் அதிரடியாகவும் விளையாடி வருகிறது. 3 வருடங்களுக்கு பிறகு இந்தியா வந்த நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் முதல் டெஸ்ட் நடைபெற்று வருகிறது.
210
Sarfaraz Khan, Duck Out and Century in Same Test, IND vs NZ
டாஸ் ஜெயிச்சு பேட்டிங் எடுத்து ரோகித் சர்மா தவறு செய்துவிட்டதாக அவர் மீது விமர்சனம் எழுந்து வருகிறது. எனினும் முதலில் பேட்டிங் செய்து 46 ரன்கள் மட்டும் எடுத்து ஹோம் கிரவுண்டில் மோசமான சாதனையை சொந்தமாக்கியது. இதில் அதிகபட்ச ஸ்கோரே 20 ரன்னு தான். அடுத்து வந்த நியூசிலாந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது.
310
Sarfaraz Khan, India vs New Zealand 1st Test
டெவோன் கான்வே 91, ரச்சின் ரவீந்திரா 134 ரன்கள் மற்றும் பந்து வீச்சாளர் டிம் சவுதி 65 ரன்கள் என்று மொத்தமாக 402 ரன்கள் குவித்து 356 ரன்கள் முன்னிலை பெற்றது. முதல் இன்னிங்ஸில் மோசமான சாதனை படைத்த இந்திய அணி தற்போது 2ஆவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர்.
410
India vs New Zealand, Test Cricket
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 35 ரன்கள், விராட் கோலி 70 ரன்கள், ரோகித் சர்மா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 70* ரன்களுடன் சர்ஃபராஸ் கான் களத்தில் இருந்தார். 3ஆம் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுளை இழந்து 231 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் இந்திய அணி 125 ரன்கள் பின்தங்கியுள்ளது.
510
M Chinnaswamy Stadium, Bengaluru Test, IND vs NZ Test Cricket
இதையடுத்து சர்ஃபராஸ் கான் உடன் ரிஷப் பண்ட் 4ஆவது ஆட்டத்தை தொடர்ந்தார். ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், சர்ஃபராஸ் கான் 110 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார். 96 ரன்கள் எடுத்திருந்த போது பவுண்டரி அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மெய்டன் சதம் விளாசினார்
610
IND vs NZ 1st Test Cricket
முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டில் ஆட்டமிழந்த சர்ஃபராஸ் கான் 2ஆவது இன்னிங்ஸில் 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறார். இதன் மூலமாக ஒரே போட்டியில் டக் அவுட் மற்றும் சதம் அடித்து சாதனை படைத்தவர்களின் பட்டியலில் சர்ஃபராஸ் கான் இடம் பிடித்துள்ளார்.
710
India vs New Zealand 1st Test
இதற்கு முன்னதாக கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டில் வெளியேறிய நிலையில் ஆவது இன்னிங்ஸில் சதம் விளாசினார்.
810
India vs New Zealand 1st Test Cricket, Bengaluru Test
அதில் அவர் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று 2014 ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஷிகர் தவான் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டில் ஆட்டமிழந்த நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் 115 ரன்கள் எடுத்துள்ளார்.
910
Rishabh Pant and Sarfaraz Khan, IND vs NZ Test
அதற்கும் முன்னதாக, மாதவ் ஆப்தே, குண்டப்பா விஸ்வநாத், சுனில் கவாஸ்கர், திலிப் வெங்கசர்கார், முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், ஷிகர் தவான், விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோரது வரிசையில் சர்ஃபராஸ் கான் இடம் பெற்றுள்ளார்.
1010
IND vs NZ Test, Rishabh Pant
தற்போது வரையில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 12 ரன்கள் மட்டுமே பின் தங்கியிருக்கிறது. ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 12ஆவது அரைசதம் அடித்தார். அதுமட்டுமில்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2500 ரன்களையும் கடந்து அசத்தியுள்ளார். பெங்களூருவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.