இன்னும் 2 நாள் தான், பெங்களூரு டெஸ்டில் இந்திய அணி ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்? 600 ரன்கள் எடுத்தால் வாய்ப்பு!

First Published Oct 19, 2024, 7:52 AM IST

India vs New Zealand, Bengaluru Test Cricket: பெங்களூரு டெஸ்ட் போட்டியானது இதுவரையில் நியூசிலாந்திற்கு சாதகமாக இருக்கும் நிலையில் எஞ்சிய 2 நாட்களில் இந்திய அணி சிறப்பான ஸ்கோரை எட்டி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Bengaluru Test: India vs New Zealand

India vs New Zealand, Bengaluru Test Cricket: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் மூன்றாம் நாளில், இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி, ரோஹித் சர்மா, சர்ஃபராஸ் கான் ஆகியோர் அரைசதம் அடித்தனர். முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா, இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி வருகிறது.

India vs New Zealand Test Cricket

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. ஆட்ட நேர முடிவில் இந்தியா விராட் கோலியின் (70) விக்கெட்டை இழந்தது.

Latest Videos


Sarfaraz Khan, IND vs NZ Test Cricket

இதனால் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. சர்ஃபராஸ் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து இந்தியா மோசமான சாதனையைப் படைத்தது.

India vs New Zealand, Virat Kohli,

மூன்றாம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து 402 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் அற்புதமாக ஆடினர். ஆட்ட நேர முடிவில் விராட் கோலி 70 ரன்களில் ஆட்டமிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Virat Kohli, KL Rahul, IND vs NZ 1st Test

முதல் இன்னிங்ஸில் கணக்கைத் தொடங்காமல் ஆட்டமிழந்த சர்ஃபராஸ் கான், இரண்டாவது இன்னிங்ஸில் அற்புதமாக பேட்டிங் செய்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா ஆட்டமிழந்த பிறகு, இன்னிங்ஸை முன்னெடுத்துச் செல்லும் பெரும் பொறுப்பு அவர் மீது விழுந்தது.

Bengaluru Test, IND vs NZ Test Cricket

ரோகித் சர்மா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏற்கனவே ஆட்டமிழந்துவிட்டனர். நான்காவது நாளில் சர்ஃபராஸ் கான் பேட்டிங்கிற்கு வருவார். அவருடன் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு பெரிய ஸ்கோரை எடுத்தால், இந்தியாவின் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாகும்.

India vs New Zealand, India 2nd Innings Score

நியூசிலாந்துக்கு 300 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்தால் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அமையும். இல்லையென்றால் இந்த போட்டி டிராவில் முடியும். ஆனால், இந்தியா பின் தங்கியுள்ள 125 ரன்களை எடுப்பதற்குள் எஞ்சிய விக்கெட்டுகளை இழந்தால் நியூசிலாந்து வெற்றி பெறும்.

India vs New Zealand, Bengaluru Test

அது நடக்க கூடாது என்றால் எஞ்சிய வீரர்கள் இன்று முழுவதும் நிலைத்து நின்று விளையாடி குறைந்தது 300 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி பெற்றால், வெற்றி பெறும் பொறுப்பு இந்திய பந்துவீச்சாளர்கள் மீது விழும்.

IND vs NZ 1st Test, Test Cricket, Bengaluru Test

இந்த சூழ்நிலையில், கீவி அணியை இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும், உலகின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சு ஜோடியான அஸ்வின்-ஜடேஜாவும் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், அதற்குள்ளா நியூசி வீரர்கள் முதல் இன்னிங்ஸைப் போன்று 2ஆவது இன்னிங்ஸிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றால் ரோகித் சர்மா மீது குற்றம் சாட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!