வங்கதேச புலியை வேட்டையாடிய சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் – இந்தியா 297 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை!

First Published Oct 12, 2024, 10:11 PM IST

வங்கதேச அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 111 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 40 பந்துகளில் சதம் அடித்த அவர், டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார்.

India vs Bangladesh 3rd T20I, Suryakumar Yadav, Sanju Samson, Team India

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டி சஞ்சு சாம்சனுக்கு முக்கியமான போட்டியாக இருந்தது.

இதற்கு முன் விளையாடிய 2 போட்டியிலும் சஞ்சு சாம்சன் 29 மற்றும் 10 ரன்கள் என்று மொத்தமாக 39 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இனிமேல் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமா? கூடாதா? என்பதை சோதிக்க இது தான் அவரது கடைசி வாய்ப்பாக இருந்தது.

India vs Bangladesh 3rd T20I, Indian Cricket Team

அதனை சரியாக யூஸ் பண்ணிய சாம்சன் புதிய சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் 40 பந்துகளில் 100 ரன்கள் கடந்த சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசிய 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக ரோகித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார். மேலும், முதல் இந்திய விக்கெட் கீப்பராக டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசி சாதனை படைத்தார். அதோடு இது தான் அவரது முதல் டி20 சதம்.

மேலும் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். கடைசியாக 47 பந்துகளில் 11 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 111 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சஞ்சுவுடன் இணைந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் 35 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். இதில், 8 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும்.

Latest Videos


Sanju Samson, Hardik Pandya, India vs Bangladesh

வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் மிகப்பெரிய சாதனை சஞ்சு சாம்சனின் அற்புதமான ஆட்டம். இந்தத் தொடரில் கேரள விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனை தொடக்க ஆட்டக்காரராக இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் பயன்படுத்தினார். இந்த உத்தி பலன் அளித்தது. சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியிலும் சஞ்சு அற்புதமாக பேட்டிங் செய்தார்.

இன்று அவர் 47 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். 40 பந்துகளில் சதம் அடித்தார் சஞ்சு. அவரது இன்னிங்ஸில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். 10வது ஓவரில் ரிஷாத் ஹொசைன் பந்துவீச்சில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்களை அடித்தார் சஞ்சு. சர்வதேச டி20 போட்டிகளில் அவர் முதல் சதத்தை அடித்தார்.

சஞ்சுவுடன் சூர்யகுமாரும் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் 35 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். சஞ்சுவும் சூர்யகுமாரும் பேட்டிங் செய்தபோது, இந்திய அணி 300 ரன்கள் எட்டும் என்று தோன்றியது. ஆனால் சிறிதளவுக்கு அது நடக்கவில்லை.

IND vs BAN, Sanju Samson

அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா

இந்த தொடர் முழுவதுமே அதிரடியாக விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா, இந்தப் போட்டியிலும் அதிரடியாக விளையாடினார். இந்த நட்சத்திர ஆல்-ரவுண்டர் 18 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

ரியான் பராக்கும் தன் பங்கிற்கு அதிரடியாக ஆடினார். அவர் 13 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அடித்தார் பராக். ரிங்கு சிங் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்தது.

India vs Bangladesh T20 Cricket

அதாவது, டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த 2ஆவது அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக, மங்கோலியா அணிக்கு எதிராக நேபாள் டி20 கிரிக்கெட்டில் 314/3 ரன்கள் குவித்து சரித்திரம் படைத்திருக்கிறது. 3ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தான் 278/3 உள்ளது. 4ஆவது இடத்தில் செக் குடியரசு 278/4 உள்ளது. 5ஆவது இடத்தில் மலேசியா 268/4 உள்ளது. 

India vs Bangladesh 3rd T20, Sanju Samson, Suryakumar Yadav

இன்று ஒருநாள் மட்டும் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது.

டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த 5ஆவது அணியாக அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் 22 சிக்ஸர்கள் விளாசியுள்ளது.

அதிக பவுண்டரி அடித்த அணிகளின் பட்டியலில் இந்தியா 47 பவுண்டரிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2ஆவது இடத்தில் செக் குடியரசு 43 பவுண்டரிகளுடன் உள்ளது.

அதிகபட்ச ஸ்கோர் எடுத்த 2ஆவது அணி என்ற சாதனையை படைத்திருக்கிறது. 297/6 ரன்கள் எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக நேபாள் 314/3 ரன்களுடன் சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

click me!