என் கிரிக்கெட் கெரியரில் பெஸ்ட் தொடர் அதுதான்..! மனம் திறந்த மாஸ்டர் பிளாஸ்டர்

First Published Nov 16, 2020, 4:03 PM IST

தனது கிரிக்கெட் கெரியரில் மிகச்சிறந்த தொடர் எதுவென்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன், கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர், 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சியவர். அதிக ரன்கள், அதிக சதங்கள் உட்பட பல பேட்டிங் சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர்.
undefined
தனது கிரிக்கெட் கெரியரில் பல சிறந்த மற்றும் மோசமான தொடர்களையும், ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களையும் சந்தித்துள்ள சச்சின் டெண்டுல்கர், தனது கிரிக்கெட் கெரியரில் மிகச்சிறந்த தொடர் என்றால், அது ஆஸ்திரேலிய அணி 2001ம் ஆண்டு இந்தியாவில் செய்த சுற்றுப்பயணம் தான் என்று தெரிவித்துள்ளார்.
undefined
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் ஏபிசி ஆஸ்திரேலியாவிற்கு அளித்த பேட்டியில் பேசிய சச்சின் டெண்டுல்கர், அதுதான் ஸ்டீவ் வாக்கின் கடைசி இந்திய சுற்றுப்பயணம் என்பதால், அந்த தொடர் ஆஸ்திரேலிய அணிக்கு மிக முக்கியமானதாக அமைந்தது; இந்தியாவுக்கும்தான். முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸிலிருந்து எஞ்சிய தொடர் முழுவதும் இந்தியாவுக்கானதாக அமைந்தது.
undefined
2வது டெஸ்ட்டில் வெற்றி பெற்ற நாங்கள் 3வது டெஸ்ட்டிலும் வென்று 2-1 என தொடரை வென்றோம். அதுதான் எனது கெரியரில் மிகச்சிறந்த தொடர் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
undefined
சச்சின் கூறிய அந்த 2வது டெஸ்ட் போட்டி, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த போட்டிகளில் முதன்மையானது. முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் பெற்ற போட்டியில், 2வது இன்னிங்ஸில் லட்சுமணன்(281) மற்றும் ராகுல் டிராவிட்டின்(180) அபாரமான பேட்டிங்கால் வெற்றி பெற்று சாதனை படைத்த இந்திய அணி, அந்த தொடரையும் வென்றது. அந்த தொடரில் தான் ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!