கோலியுடன் ரஹானேவை ஒப்பிடாதீங்க..! கடுமையாக கண்டித்த சச்சின் டெண்டுல்கர்

First Published | Dec 31, 2020, 3:48 PM IST

விராட் கோலியுடன் அஜிங்க்யா ரஹானேவின் கேப்டன்சியை ஒப்பிடக்கூடாது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
 

sachin tendulkar advises people should not compare rahane with virat kohli
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணி வெற்றி பெற்ற நிலையில், இனிமேல் இந்திய அணி இந்த தொடரில் கம்பேக் கொடுக்காது; அதுவும் கோலி இல்லாத இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று மார்க் வாக், மைக்கேல் வான் ஆகிய முன்னாள் வீரர்கள் கருதினர். ஆனால் அஜிங்க்யா ரஹானேவின் கேப்டன்சியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது டெஸ்ட்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
sachin tendulkar advises people should not compare rahane with virat kohli
அந்த போட்டியில் ரஹானேவின் கேப்டன்சி சிறப்பாக இருந்தது. பவுலிங் சுழற்சி, ஃபீல்டிங் செட்டப், வீரர்களை கையாண்ட விதம், நிதானம் என அனைத்து வகையிலும் மாஸ் காட்டினார் ரஹானே. இதையடுத்து கோலியுடன் ஒப்பிட்டு, ரஹானேவின் கேப்டன்சியை விதந்தோதிய சில முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ரஹானேவையே நிரந்தர கேப்டனாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியுடன் ரஹானேவை ஒப்பிடக்கூடாது. ரஹானே வித்தியாசமான கேரக்டர். அவரது நோக்கமும் எண்ணமும் ஆக்ரோஷமாக இருக்கும். ஆனால் அதை வெளிப்படையாக தனது உடல்மொழியில் காட்டமாட்டார். நான் அனைவருக்கும் நினைவுபடுத்த விழைவது ஒன்றுதான். கோலி, ரஹானே ஆகிய இருவருமே இந்தியர்கள்; இந்தியாவிற்காக ஆடுகிறார்கள். நாட்டிற்காக ஆடும்போது, எந்த தனிநபரையும் முன்னிறுத்தக்கூடாது. நாடு மற்றும் தேசிய அணி ஆகியவற்றிற்கு முன் யாருமே பெரிது கிடையாது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!