டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த அஷ்வின்..!

First Published | Dec 30, 2020, 5:33 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்பின்னர் அஷ்வின் தனித்துவ சாதனை படைத்துள்ளார்.
 

ஆஸி.,க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் அஷ்வின் முதல் இன்னிங்ஸில் 3, 2வது இன்னிங்ஸில் 2 என மொத்தம் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அந்த போட்டியில் 2வது இன்னிங்ஸில் ஆஸி., வீரர் ஜோஷ் ஹேசில்வுட்டை வீழ்த்தியன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான இடது கை வீரர்களை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார். அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 192 இடது கை விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Tap to resize

இதன்மூலம் முத்தையா முரளிதரனின் சாதனையை அஷ்வின் முறியடித்துள்ளார். முரளிதரன் 191 இடது கை விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சாதனையை அஷ்வின் முறியடித்துள்ளார். அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 73 போட்டிகளில் ஆடி 375 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Latest Videos

click me!