#AUSvsIND அடுத்த டெஸ்ட்டில் இந்திய அணியில் நடராஜன்..? 2 பேரை ஓவர்டேக் செய்து அணியில் இடம்..?

First Published | Dec 30, 2020, 4:19 PM IST

ஆஸி.,க்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் நடராஜன் அறிமுகமாக வாய்ப்புள்ளது.
 

ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, அதன் விளைவாக ஆஸி., சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் நெட் பவுலராக எடுக்கப்பட்டு, சில பவுலர்களின் காயம் காரணமாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடும் வாய்ப்பையும் பெற்ற நடராஜன், அந்த போட்டிகளில் அபாரமாக பந்துவீசி இந்திய அணியின் வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்தார்.
அதன்விளைவாகத்தான், டெஸ்ட் கிரிக்கெட்டின் நெட் பவுலராகவும் இந்திய அணி நிர்வாகத்தால் தக்கவைக்கப்பட்டார். இந்நிலையில், அவரது நல்ல நேரம், ஆஸி.,க்கு எதிரான இதே டெஸ்ட் தொடரிலேயே அவருக்கு ஆடும் வாய்ப்பு கிடைப்பதற்கான தருணம் கைகூடி வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் ஷமியும் 2வது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவும் காயத்தால் வெளியேறியுள்ளனர்.
Tap to resize

ஷமிக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் எடுக்கப்பட்டார். 2வது டெஸ்ட்டில் காயமடைந்த உமேஷ் யாதவுக்கு பதிலாக நடராஜன் அணியில் எடுக்கப்படுவார். ஆனால் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்றால் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். இந்திய அணியின் முதன்மை ஃபாஸ்ட் பவுலர் பும்ரா; இப்போதைக்கு 2வது ஃபாஸ்ட் பவுலர் சிராஜ். 3வது பவுலருக்கான இடத்திற்குத்தான் போட்டி.
நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் இருந்தாலும் கூட, இடது கை பந்துவீச்சாளர் என்ற வகையிலும், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டிற்கு வெரைட்டியை வழங்குவார் என்ற முறையிலும் நடராஜனுக்கான வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார். எனவே சிட்னியில் வரும் ஜனவரி 7ம் தேதி தொடங்கும் 3வது டெஸ்ட்டில் நடராஜனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!