Published : Sep 30, 2024, 02:10 PM ISTUpdated : Oct 04, 2024, 06:17 PM IST
IPL 2025, Rohit Sharma: ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு மாறக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக தொடர்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் ஓரிரு மாதங்களில் ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஒரு ஆர்டிஎம் கார்டு உள்பட மொத்தமாக 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் தான் தற்போது ஒவ்வொரு அணியும் டிரேடிங் மற்றும் வீரர்களை தக்க வைத்துக் கொள்ள, விடுவிக்க தயாராகி வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் 10 ஆண்டுகளாக கேப்டனாக இருந்து 5 முறை டிராபி வென்று கொடுத்த ரோகித் சர்மா தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் சேர இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு வரையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருந்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முதல் சீசனில் டிராபி வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியா 2ஆவது சீசனில் இறுதிப் போட்டி வரை சென்றார்.
25
IPL 2025 Mega Auctions
இதையடுத்து 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டிரேடு முறையில் குஜராத் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்தார். ஆனால், ரோகித் சர்மா ரசிகர்களின் மத்தியில் எதிர்ப்பை பெற்றார். மேலும், ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்டியா விளையாடிய 14 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 10 போட்டிகளில் தோல்வி அடைந்து 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து வெளியேறியது.
இந்த தொடரில் மோசமான சாதனை படைத்த அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழ்ந்தது. இந்த நிலையில் தான் வரும் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
35
Mumbai Indians, Rohit Sharma, IPL 2025 Retentions
2011 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடமிருந்து விடுவிக்கப்பட்ட ரோகித் சர்மா அந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஏலம் எடுக்கப்பட்டார். மேலும், 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தான் ஸ்போர்ட்ஸ் யாரியின் கூற்றுப்படி 2025 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் சேர இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக தக்க வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
45
Rohit Sharma Join LSG?
ரோகித் சர்மா மட்டும் லக்னோ அணிக்கு சென்றால், அந்த அணிக்கு ரோகித் சர்மாவின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடி வரும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 2 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. ஆனால், 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய 14 போட்டிகளில் 7ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்த ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து தற்போது ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே இடம் பெற்று விளையாடி வருகிறார். இதுவரையில் 257 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 2 சதம், 43 அரைசதங்கள் உள்பட 6,628 ரன்கள் குவித்துள்ளார். அதோடு, 15 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
55
LSG Captain KL Rahul
லக்னோ அணியின் கேப்டனாக இடம் பெற்று விளையாடி வந்த கேஎல் ராகுல் மற்றும் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா இடையில் கடந்த ஐபிஎல் தொடரில் விவாதம் ஏற்பட்டது. மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்பு ராகுலை கடுமையாக விமர்சித்தார். இதன் காரணமாக ஐபிஎல் 2025 தொடருக்கு முன்னதாக கேஎல் ராகுல் லக்னோ அணியிலிருந்து விலக இருப்பதாக் கூறப்பட்டது.
ஆனால், அதற்கு முன்னதாக சஞ்சீவ் கோயங்கா, தங்களது அணியின் அசைக்க முடியாத சொத்து கேஎல் ராகுல் என்பது போன்று அவரை பாராட்டி பேசினார். இதன் மூலமாக 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் கேஎல் ராகுல் லக்னோ அணியில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கேப்டன் பொறுப்பு அவருக்கு கொடுக்கப்படுமா அல்லது வேறு ஒரு கேப்டன் அணியில் இடம் பெறுவாரா என்பது குறித்து முறையான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கேஎல் ராகுல் இந்திய அணியில் இடம் பிடிப்பது என்பது சற்று சிரம்மாக உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இடம் பெற்று விளையாடிய கேஎல் ராகுல், 2024 ஆம் ஆண்டு டி20 தொடர் உலகக் கோப்பை தொடரில் இடம் பெறவில்லை. தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.