IND vs BAN: ஐபிஎல் செல்லத்தை தட்டி தூக்கிய டீம் இந்தியா – மாயங்க் யாதவ்வை வச்சு வங்கதேசத்திற்கு நியூ ஸ்கெட்ச்!

First Published | Sep 29, 2024, 7:06 PM IST

இந்தியா-வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெறவில்லை. மாயங்க் யாதவ் முதல் முறையாக அணியில் இடம் பிடித்துள்ளார்.

Mayank Yadav - India T20I Squad

கான்பூரில் உள்ள கிரீன் பார்க்கில் இந்தியா-வங்கதேச தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியானது டிராவை நோக்கிந் சென்று கொண்டிருக்கிறது. கான்பூரில் பெய்து வரும் மழையின் காரணமாக இந்தப் போட்டியானது டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 மற்றும் 3ஆவது நாளில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை.

முதல் நாளில் மட்டும் வங்கதேசம் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதற்கிடையில், டி20 தொடருக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. டி20 வடிவத்தில் இருந்து ஓய்வு பெற்றதால் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

Mayank Yadav

சனிக்கிழமை வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான அணியை பிசிசிஐ அறிவித்தது. அக்டோபர் 6 ஆம் தேதி இந்தியா-வங்கதேச டி20 தொடர் தொடங்குகிறது. இரு அணிகளும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடும். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிய மாயங்க் யாதவ் முதல் முறையாக தேசிய அணியில் இடம் பெற்றுள்ளார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வருண் சக்ரவர்த்தி தேசிய அணிக்கு திரும்பியுள்ளார்.

Tap to resize

Mayank Yadav

டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள்:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், வருண் சக்ரவர்த்தி, ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் மாயங்க் யாதவ்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பியுள்ளார். இருப்பினும், அவருக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை. ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, வங்கதேச தொடருக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Suryakumar Yadav T20I Captain

ஐபிஎல்-ல் அசத்தலான ஆட்டத்திற்கு மாயங்க் யாதவ்விற்கு கிடைத்த பரிசு

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக முதல் முறையாக விளையாடும் வாய்ப்பைப் பெற்ற மாயங்க் யாதவ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் அறிமுகப் போட்டியில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐபிஎல் தொடரில் அறிமுகப் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதை வென்றார். அந்தப் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. 22 வயதான இந்த கிரிக்கெட் வீரர், ஐபிஎல் அறிமுக சீசனில் 4 போட்டிகளில் விளையாடி 12.14 சராசரியிலும், 6.98 எக்கானமி விகிதத்திலும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் விளையாட முடியவில்லை. இருப்பினும், அவர் வெளிப்படுத்திய ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

Hardik Pandya

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா ஹர்திக்?

களத்திற்கு வெளியே தனிப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்துவிட்டு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராகிவிட்டார் ஹர்திக். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்காக விளையாடுகிறார் இந்த ஆல்ரவுண்டர். இந்த முறை வங்கதேசத்திற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, டெஸ்ட் தொடரிலும் தேசிய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே ஹர்திக்கின் இலக்கு.

Ravichandran Ashwin

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இடமில்லை:

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. முதல் போட்டியில் பேட்டிங்கில் 113 ரன்கள் குவித்த அஸ்வின், பவுலிங்கில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். இதே போன்று தற்போது கான்பூரில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றி ஆசிய கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய 2ஆவது வீரர் என்ற சாதனையை முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

Latest Videos

click me!