IPL 2025 Mega Auctions: ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்களுக்கு தடை – 2 ஆண்டுகளுக்கு ஆப்பு வச்ச பிசிசிஐ!

First Published | Sep 29, 2024, 2:31 PM IST

IPL 2025 Mega Auctions: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இடம் பெறாத வெளிநாட்டு வீரர்களுக்கு 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது. இந்த புதிய விதிமுறை மினி ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஐபிஎல் 2025 தொடரில் இந்திய வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2025 Auctions

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இடம் பெறாத வீரர்களுக்கு 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட பிசிசிஐ தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2025 தொடருக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. ஆனால், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக பிசிசிஐ முக்கியமான விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். மேலும், ஐபிஎல் ஒப்பந்தத்துடன் எல்லா போட்டியிலும் வீரர்கள் கூடுதலாக ரூ.1.05 கோடி வரையில் பெறலாம். ஒவ்வொரு போட்டிக்கும் சம்பளமாக ரூ.7.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Years Ban For Foreign Players

வீரர்களுக்கு 2 ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கடந்த சில ஆண்டுகளாக மெகா ஏலத்தில் பங்கேற்காத வெளிநாட்டு வீரர்கள் மினி ஏலத்தில் இடம் பெற்று அதிக தொகைக்கு ஏலம் போவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தடுக்கும் விதமாக பிசிசிஐ புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.

ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடத்தப்படுகிறது. இதில், ஒவ்வொரு அணியும் அதிக வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்பதால் ஒரு வீரருக்கு என்று அதிக தொகையை செலவு செய்ய வாய்ப்பிருக்காது. இதுவே மினி ஏலத்தில் குறைவான வீரர்கள் ஏலம் எடுக்கப்பட வேண்டி இருக்கும் நிலையில், வெளிநாட்டு வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள்.


IPL 2025 Mega Auctions

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர்களான மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக ரூ.24.75 கோடிக்கு கேகேஆர் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். இதே போன்று பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஹைதராபாத் அணி மூலமாக ஏலம் எடுக்கப்பட்டார்.

ஆனால் இதுவரையில் எந்தவொரு இந்திய வீரருக்கும் இது போன்று சம்பளம் அளிக்கப்படவில்லை. பும்ராவுக்கு கூட மும்பை இந்தியன்ஸ் ரூ.12 கோடி மட்டும் சம்பளம் கொடுக்கிறது. இதன் காரணமாக வெளிநாட்டு வீரர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் பிசிசிஐ முக்கியமான விதியை அமல்படுத்தி உள்ளது.

IPL 2025 Foreign Players

மெகா ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்யாத வெளிநாட்டு வீரர்கள் அடுத்தடுத்து நடக்க இருக்கும் மினி ஏலத்தில் பங்கேற்க முடியாது. அதன்படி ஐபிஎல் தொடர்களில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு வீரர்கள் கண்டிப்பான முறையில் தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டிய உள்ளது.

இதே போன்று வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட பிறகு தொடரிலிருந்து விலகினால் அவர்களும் 2 ஐபிஎல் தொடர்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் நடைபெறும் ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திலும் இந்திய வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2025 New Rules

ஐபிஎல் 2025 தொடர் முதல் முக்கியமான விதி ஒன்றும் அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது, இந்திய அணியைச் சேர்ந்த ஒருவர் ஓய்வு பெற்றவரோ, ஓய்வு பெறாதவரோ 5 ஆண்டுகளுக்கு எந்தவித சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி20) இடம் பெறவில்லை என்றாலும் சரி, பிசிசிஐ ஒப்பந்தம் பெறவில்லை என்றாலும் சரி, அவர் உள்ளூர் வீரராக கருதப்படுவார்.

உதாரணத்திற்கு தோனி 2019 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இதுவரையில் அவர் ஒரு சர்வதேச போட்டிகளில் கூட விளையாடவில்லை. அப்படியென்றால் தோனி உள்ளூர் வீரராக கருதப்படுவார். இந்த விதி தோனிக்காகவே கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

வரும் 2027 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரையில் இம்பேக்ட் விதி பொருந்தும். இதில் எந்த வீரருக்கும் உடன்பாடில்லை என்றாலும் கூட பிசிசிஐ இந்த விதியில் உறுதியாக இருக்கிறது.

Latest Videos

click me!