MS Dhoni Uncapped Player, IPL 2025: Uncapped வீரராக தக்க வைக்கப்படும் தோனி? ரூ.4 கோடி மட்டுமே சம்பளம்!

Published : Sep 29, 2024, 04:29 PM ISTUpdated : Sep 29, 2024, 04:32 PM IST

IPL 2025, CSK Retentions: ஐபிஎல்-ல் 'uncapped player' தொடர்பான புதிய விதிமுறைகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த விதிமுறையின்படி எம்.எஸ்.தோனியை அணியில் தக்கவைத்துக்கொள்ள முடியும். 2025 ஐபிஎல் தொடரில் CSK அணியில் தோனி இடம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

PREV
15
MS Dhoni Uncapped Player, IPL 2025: Uncapped வீரராக தக்க வைக்கப்படும் தோனி? ரூ.4 கோடி மட்டுமே சம்பளம்!
IPL 2025, Indian Premier League

ஐபிஎல்-ல் 'uncapped player' தொடர்பான விதிமுறையால் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளது. புதிய விதிமுறைகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத அல்லது பிசிசிஐ ஒப்பந்தத்தில் இல்லாத இந்திய கிரிக்கெட் வீரர் 'uncapped player' எனக் கருதப்படுவார். ரூ.4 கோடி ரூபாய்க்கு ஒரு 'uncapped player'-ஐ அணியில் தக்கவைத்துக்கொள்ளலாம். சமீபத்தில் தேசிய அணிக்காக விளையாடிய கிரிக்கெட் வீரரைத் தக்கவைக்க குறைந்தபட்சம் 11 கோடி ரூபாய் செலவிட வேண்டும்.

25
IPL Retentions

இந்த விதிமுறையின்படி மகேந்திர சிங் தோனியை அணியில் தக்கவைத்துக்கொள்ள முடியும். தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்கவைத்துக் கொள்வது சிஎஸ்கேவுக்கு எல்லா வகையிலும் லாபகரமாக இருக்கும்.

ஐபிஎல்-ல் புதிய விதிமுறைகள்

2008 முதல் 2020 வரை ஐபிஎல்-ல் 'uncapped player rule' இருந்தது. தற்போது அந்த விதியை பிசிசிஐ மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம். ஐபிஎல் 2025 ஆண்டு முதல் கொண்டு வரப்படும் தக்க வைக்கப்படுபவர்களின் பட்டியலில் 'capped player முறையே முதல் மற்றும் நான்காவது வீரர்களைத் தக்க வைக்க 18 கோடி ரூபாய் செலவிட வேண்டும்.

இரண்டாவது மற்றும் 5ஆவது வீரர்களுக்கும் 18 கோடி ரூபாய் செலவிட வேண்டும். மூன்றாவது வீரருக்கு 11 கோடி ரூபாய் செலவிட வேண்டும். இதன் மூலமாக 6 வீரர்களை தக்க வைக்க ரூ.79 கோடி செலவிட வேண்டியுள்ளது. மொத்தமாக ஒரு அணி ரூ. 120 கோடி வரை அணிகள்.

35
IPL 2025 Rules

மீண்டும் தோனி குறித்த பேச்சு:

ஐபிஎல்-ல் வீரர்களைத் தக்கவைப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து தோனி குறித்த பேச்சு மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அவரது ஓய்வு குறித்து பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால் தற்போது அந்தப் பேச்சு வேறு திசையில் பயணிக்கிறது. தோனி மீண்டும் விளையாடுவார் என்றே கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இந்த முறை வீரர்களைத் தக்கவைப்பது தொடர்பான விதிமுறைகள் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

45
IPL 2025 Mega Auctions - MS Dhoni Uncapped Players

சிஎஸ்கே அணியில் தக்க வைப்படும் வீரர்கள்:

ஐபிஎல் புதிய விதிமுறைகளின்படி ஒரு அணி 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யாரெல்லாம் தக்க வைக்கப்படுவார்கள் என்று பார்த்தால் அதில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலாவதாக இடம் பெற்றுள்ளார். மேலும், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, ரச்சின் ரவீந்திரா, மதீஷா பதிரனா மற்றும் எம்.எஸ்.தோனி ஆகிய 6 வீரர்கள் தக்க வைக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

55

கடந்த 2023 ஆம் ஆண்டு தான் இம்பேக்ட் பிளேயர் விதி ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி ஒரு பேட்ஸ்மேனுக்கு பதிலாக ஒரு பவுலரும், ஒரு பவுலருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேனும் விளையாட அனுமதிக்கப்பட்டது. டாஸ் போடும் போது ஒரு அணி 5 மாற்று வீரர்களின் பெயரை அறிவிக்க வேண்டும். பின்னர் போட்டிகளின் போது விளையாடும் பிளேயிங் 11க்கு பதிலாக ஒரு மாற்று வீரரை அந்த 5 வீரர்களிலிருந்து ஒருவரை பயன்படுத்தலாம். 

அப்படிப்பட்ட இம்பேக்ட் விதி முறை ரத்து செய்யப்படவில்லை. இந்த ஆண்டும் அந்த விதி தொடரும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. வரும் 2027 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரையில் இம்பேக்ட் விதி பொருந்தும். இதில் எந்த வீரருக்கும் உடன்பாடில்லை என்றாலும் கூட பிசிசிஐ இந்த விதியில் உறுதியாக இருக்கிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories