Harry Brook: ஒரு கேப்டனாக விராட் கோலி, எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த அதிரடி மன்னன் ஹாரி ஃப்ரூக்!

First Published | Sep 30, 2024, 12:05 PM IST

Harry Brook Breaks Virat Kohli and MS Dhoni Records: இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 312 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த விராட் கோலி மற்றும் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

Harry Brook

இங்கிலாந்து அணியின் கேப்டனான அதிரடி மன்னன் ஹாரி ஃப்ரூக் ஒரு கேப்டனாக அதிக ரன்கள் குவித்து எம்.எஸ்.தோனி மற்றும் விராட் கோலியின் சாதனையை சர்வ சாதாரணமாக முறியடித்துள்ளார். இங்கிலாந்து சென்ற ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இதில், டி20 தொடரை இரு அணிகளும் 1-1 என்று கைப்பற்றின. ஒரு போட்டி கைவிடப்பட்டது. இதே போன்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 3-2 என்று கைப்பற்றியது.

MS Dhoni

கடைசியாக வெற்றியை தீர்மானிக்கும் 5ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 309 ரன்கள் எடுத்தது. பென் டக்கெட் அதிகபட்சமாக 107 ரன்கள் குவித்தார். இதே போன்று கேப்டன் ஹாரி ஃப்ரூக் 72 ரன்கள் குவித்தார். பின்னர், ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது.

இதில், 20.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஆஸ்திரேலியா 165 ரன்கள் குவித்தது. அப்போது மழை குறுக்கிடவே டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலியா 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா விளையாடிய 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்று கைப்பற்றியது.

Latest Videos


Virat Kohli vs Australia ODI Runs

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து கேப்டன் ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 312 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இதன் மூலமாக விராட் கோலி மற்றும் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவிற்கு ஒருநாள் தொடரில் ஒரு கேப்டனாக விராட் கோலி 310 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

ஆம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு கேப்டனாக விராட் கோலி 310 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. இதே போன்று எம்.எஸ்.தோனி 2009 ஆம் ஆண்டு 285 ரன்கள் குவித்திருந்தார். இந்த சாதனையை தற்போது கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே ஹாரி ஃப்ரூக் முறியடித்துள்ளார்.

England Captain Harry Brook

ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த கேப்டன்கள்:

ஹாரி ஃப்ரூக் (இங்கிலாந்து, 2024) – 312 ரன்கள்

விராட் கோலி (இந்தியா, 2019) – 310 ரன்கள்

எம்.எஸ்.தோனி (இந்தியா, 2009) – 285 ரன்கள்

இயான் மோர்கன் (இங்கிலாந்து, 2015) – 278 ரன்கள்

பாபர் அசாம் (பாகிஸ்தான், 2002) – 276 ரன்கள்

England Captain Harry Brook Cricket Records

இதுவரையில் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஃப்ரூக் 1558 ரன்கள் எடுத்துள்ளார். அதோடு, ஒரு விக்கெட்டும் கைப்பற்றியிருக்கிறார். இதே போன்று 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஃப்ரூக் 719 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 110* ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 39 டி20 போட்டிகளில் விளையாடிய ஃப்ரூக் 707 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 81* ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!