#AUSvsIND ரோஹித் சர்மா அரைசதம்.. 2வது இன்னிங்ஸில் நல்ல தொடக்கம்..! இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு

First Published Jan 10, 2021, 2:41 PM IST

ஆஸி.,க்கு எதிரான 3வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு ரோஹித்தும் கில்லும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர். அதனால், இலக்கு கடினமானதாக இருந்தாலும் வெற்றி வாய்ப்பும் உள்ளது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் அடித்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 244 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், 94 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸி., அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
undefined
3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் அடித்திருந்தது ஆஸி., அணி. 4ம் நாளான இன்றைய ஆட்டத்தை ஸ்மித்தும் லபுஷேனும் தொடர்ந்தனர். இருவருமே மிகச்சிறப்பாக ஆடினர். லபுஷேன் 73 ரன்களும், ஸ்மித் 81 ரன்களும் அடித்தனர். மேத்யூ வேட் 4 ரன்களுக்கு நடையை கட்டினார். அதன்பின்னர் கேப்டன் டிம் பெய்னும் கேமரூன் க்ரீனும் இணைந்து மிகச்சிறப்பாக ஆடினர். அபாரமாக ஆடி அரைசதத்தை கடந்து சதத்தை நோக்கி ஆடிய கேமரூன் க்ரீன் 84 ரன்களுக்கு பும்ராவின் பந்தில் ஆட்டமிழக்க, அத்துடன் 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது ஆஸி., அணி. டிம் பெய்ன் 39 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
undefined
ஆஸி., அணி மொத்தமாக 406 ரன்கள் முன்னிலை பெற்றதையடுத்து, 407ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் ஷுப்மன் கில்லும் இணைந்து சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 71 ரன்களை சேர்த்து கொடுத்தனர். கில் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடக்கம் முதலே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்த ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். ஆனால் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 52 ரன்களுக்கு ரோஹித் ஆட்டமிழந்தார். 98 பந்தில் 52 ரன்கள் அடித்தார் ரோஹித் சர்மா.
undefined
3ம் நாள் ஆட்டம் முடிய 3 ஓவர்களே மீதமிருந்த நிலையில், ரோஹித் சர்மா ஆட்டமிழந்ததையடுத்து, ரஹானேவும் புஜாராவும் களத்தில் இருக்க, இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் அடித்திருந்த நிலையில், 3ம் நாள் ஆட்டம் முடிந்தது. ரோஹித்தும் கில்லும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்ததால், இந்திய அணியிடம் இன்னும் 8 விக்கெட்டுகள் கைவசம் இருப்பதால், எஞ்சிய 308 ரன்களை கடைசி நாள் ஆட்டத்தில் அடிக்கலாம்.
undefined
click me!