#AUSvsIND இந்திய அணிக்கு இதைவிட கெட்ட செய்தி இருக்க முடியாது..!

First Published Jan 9, 2021, 8:06 PM IST

இந்திய அணியில் வீரர்கள் காயத்தால் டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் சோகம் தொடர்ந்துவருகிறது. ஷமி, உமேஷ் யாதவ், கேஎல் ராகுலை தொடர்ந்து அடுத்த மரண அடி விழுந்துள்ளது.
 

ஆஸி.,க்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட முதல் போட்டியில் கையில் அடிபட்டு ஷமி, அந்த போட்டியுடன் தொடரிலிருந்து விலகினார். 2வது போட்டியில் உமேஷ் யாதவ் காயமடைந்து தொடரிலிருந்து விலகினார். 3வது டெஸ்ட் போட்டிக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கேஎல் ராகுல் காயமடைந்து தொடரிலிருந்து விலகினார்.
undefined
புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா ஆகிய சீனியர் ஃபாஸ்ட் பவுலர்கள், காயம் காரணமாக ஆஸி., சுற்றுப்பயணத்திலேயே இல்லை.
undefined
இந்நிலையில், 3வது டெஸ்ட்டில் இடது கை கட்டைவிரலில் காயமடைந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இந்த தொடரில் இனிமேல் ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
undefined
சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடும்போது ரிஷப் பண்ட், பாட் கம்மின்ஸின் பவுன்ஸரில் இடது முழங்கையில் காயமடைந்த நிலையில், அவரை தொடர்ந்து ஜடேஜா, மிட்செல் ஸ்டார்க்கின் பவுன்ஸரில் இடது கை கட்டைவிரலில் காயமடைந்தார். முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்ட நிலையில், அவர் 2வது இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்யாமல் இருந்தார்.
undefined
இந்நிலையில், அவரது இடது கை கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் இந்த போட்டியின் 2வது இன்னிங்ஸிலும் ஆடமாட்டார். கடைசி டெஸ்ட் போட்டியிலும் ஆடமாட்டார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
undefined
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் சிறந்த பங்களிப்பை அளிக்கக்கூடிய ஜடேஜா ஆடாதது இந்திய அணிக்கு பேரிழப்பாக அமையும். சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட்டில் கூட, முதல் இன்னிங்ஸில் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா, ஒரு ரன் அவுட்டும் செய்தார். பேட்டிங்கிலும் 28 ரன்கள் நாட் அவுட். அனைத்துவகையிலும் அணிக்கு சிறந்த பங்களிப்பை செய்யக்கூடிய ஜடேஜாவின் இழப்பு ஈடுகட்டமுடியாதது.
undefined
click me!