ஜித்தனுக்கு ஜித்தன் வந்துகிட்டேதான் இருப்பான்!டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை தகர்த்தெறிந்த ரிஷப் பண்ட்

First Published Jan 20, 2021, 2:58 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக, தோனியின் ரெக்கார்டை முறியடித்துள்ளார் ரிஷப் பண்ட்.
 

ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹா, பேட்டிங் சரியாக ஆடாததால், 2வது டெஸ்ட்டில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணியில் வாய்ப்பு பெற்றார். விக்கெட் கீப்பிங்கில் சொதப்பினாலும் பேட்டிங்கில் ஓரளவிற்கு நன்றாகவே ஆடினார். சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட்டில் நன்றாக பேட்டிங் ஆடினார்.
undefined
தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட்டில், ஆஸி.,யின் கோட்டையான பிரிஸ்பேனில் அந்த அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றியுடன், தொடரையும் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரிஷப் பண்ட். கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு 328 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷுப்மன் கில் 91 ரன்கள் அடித்து நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தார். புஜாராவும் அரைசதம் அடித்தார். ஆனால் அதன்பின்னர் ரிஷப் பண்ட்டின் அதிரடியான பேட்டிங் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தது.
undefined
89 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்களையும், மிகப்பெரிய லெஜண்ட் ஸ்பின்னரான நேதன் லயனின் ஸ்பின் பவுலிங்கையும் திறம்பட எதிர்கொண்டு ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் ரிஷப் பண்ட்.
undefined
கடைசி டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் முதல் ரன்னை அடித்தபோதே, 1000 டெஸ்ட் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் ரிஷப் பண்ட். தனது 27வது டெஸ்ட் இன்னிங்ஸில் 1000 ரன்களை எட்டினார் பண்ட். இதன்மூலம் 1000 டெஸ்ட் ரன்களை அதிவேகமாக கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இதற்கு முன் தோனி 32 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எட்டியதே சாதனையாக இருந்தது. அதற்கு முன் இருந்த விக்கெட் கீப்பர்களின் பல்வேறு சாதனைகளை ஜாம்பவான் தோனி முறியடித்திருந்தார். தோனியின் விக்கெட் கீப்பிங் சாதனையை முறியடிக்கும் அளவிற்கு ரிஷப் பண்ட் இன்னும் விக்கெட் கீப்பிங்கில் டெக்னிக்கலாக பக்குவப்படவில்லை என்றாலும், தோனியின் பல பேட்டிங் ரெக்கார்டுகளை தகர்க்க வாய்ப்புள்ளது.
undefined
click me!