#INDvsENG இந்திய டெஸ்ட் அணியில் முதல் வாய்ப்பு..! தகுதியான வீரருக்கு சரியான சான்ஸ்

First Published Jan 20, 2021, 2:22 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அக்ஸர் படேல் முதல் முறையாக எடுக்கப்பட்டுள்ளார்.
 

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட், ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. இதில், முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத் சர்தார் படேல் மைதானத்திலும் நடக்கவுள்ளது.
undefined
சென்னையில் நடக்கவுள்ள முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி அசத்திய சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது.
undefined
இடது கை ஸ்பின்னர் அக்ஸர் படேல் முதல் முறையாக டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பேட்டிங்கும் நன்றாக ஆடக்கூடிய ஸ்பின்னரான அக்ஸர் படேல், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 38 ஒருநாள் மற்றும் 11 டி20 போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் முறையாக டெஸ்ட் அணியில் வாய்ப்பை பெற்றுள்ளார்.
undefined
முதல் தர கிரிக்கெட்டில் 31 போட்டிகளில் ஆடி 1,420 ரன்களை அடித்துள்ள அக்ஸர் படேல், 104 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஸ்மார்ட்டாக பந்துவீசக்கூடிய அக்ஸர், அதிரடியாகவும், தேவைப்படும் நேரத்தில் தடுப்பாட்டம் ஆடி அணியை காப்பாற்ற வல்லவும் தகுந்த வீரர்.
undefined
ஆஸி.,க்கு எதிரான தொடரில் அறிமுக வீரர்கள் அபாரமாக ஆடி அசத்தி நம்பிக்கையளித்ததால், இதுவரை டெஸ்ட் போட்டியில் ஆடிராத வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளிக்கப்படுகிறது. இது இந்திய கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமான விஷயம்.
undefined
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), அஷ்வின், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர்.
undefined
click me!