ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை: விக்கெட் கீப்பர்களில் நம்ம ரிஷப் பண்ட் தான் டாப்..!

First Published Jan 20, 2021, 3:45 PM IST

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் தான், விக்கெட் கீப்பர்களில் முன்னணியில் இருக்கிறார்.
 

ஆஸி.,க்கு எதிரான பிரிஸ்பேனில் நடந்த, தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடி 89 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த ரிஷப் பண்ட், ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
undefined
பிரிஸ்பேன் டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்த ரிஷப் பண்ட், அதிவேகமாக 1000 டெஸ்ட் ரன்களை(27 இன்னிங்ஸ்) எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் 32 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை அடித்திருந்த தோனியின் ரெக்கார்டை முறியடித்தார் ரிஷப் பண்ட்.
undefined
ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப்பின் விக்கெட் கீப்பிங் விமர்சனத்திற்கு உள்ளானாலும், அவரது பேட்டிங்கால் தான் இந்திய அணி பிரிஸ்பேன் டெஸ்ட்டில் வென்றது. இந்நிலையில், அந்த போட்டிக்கு பின்னர், அப்டேட் செய்யப்பட்ட ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 13ம் இடத்திற்கு முன்னேறினார் ரிஷப் பண்ட்.
undefined
ரிஷப் பண்ட்டுக்கு அடுத்த இடத்தில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனும் மிகச்சிறந்த விக்கெட் கீப்பருமான குயிண்டன் டி காக்(15வது இடம்) உள்ளார். மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வளர்ந்துவரும் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 36வது இடத்தில் உள்ளார்.
undefined
click me!