ஐபிஎல் தொடங்கும் முன்பே மும்பை இந்தியன்ஸ் வீரரை நினைத்து பீதியாகும் பாண்டிங்

First Published Sep 17, 2020, 10:46 PM IST

ஐபிஎல் 13வது சீசன் வரும் சனிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பாண்டிங், மும்பை இந்தியன்ஸ் அணியின் அபாயகரமான வீரர் யார் என்று தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் நடந்துள்ள நிலையில், ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத மற்றும் ஒருமுறை கூட இறுதி போட்டிக்கு கூட முன்னேறிராத தோல்விகரமான அணியென்றால் அது டெல்லி கேபிடள்ஸ் தான்.
undefined
ஆனால் ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர், ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சியில் கடந்த 2 சீசனாக டெல்லி கேபிடள்ஸ் சிறப்பாக ஆடிவருகிறது. குறிப்பாக கடந்த சீசனில், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பிளே ஆஃபிற்கு முன்னேறியது.
undefined
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில், ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, அலெக்ஸ் கேரி, ஷிம்ரான் ஹெட்மயர் ஆகிய இளம் வீரர்களையும் ரஹானே, அஷ்வின், தவான் ஆகிய சீனியர் வீரர்களையும் கொண்ட இளமை துடிப்பும், அனுபவமும் கலந்த அணியாக டெல்லி கேபிடள்ஸ் உள்ளது.
undefined
அந்த அணிக்கு பின்னால் ரிக்கி பாண்டிங் என்ற மிகச்சிறந்த கிரிக்கெட் மூளை இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். அதனால் இந்த சீசனில் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
undefined
இந்நிலையில், அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிடம், மும்பை இந்தியன்ஸ் அணியின் அபாயகமரமான வீரர் யார் என்ற கேள்விக்கு ரோஹித் சர்மா என்று பதிலளித்த அவர், டி20 கிரிக்கெட்டில் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா. சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் என இரண்டிலுமே மிகச்சிறந்த ரெக்கார்டுகளை கொண்டவர் என்று தெரிவித்தார்.
undefined
ரிக்கி பாண்டிங்கின் கேப்டன்சியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிய ரோஹித் சர்மா, பாண்டிங்கிற்கு பின்னர், அந்த அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்று 4 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல்லில் 188 போட்டிகளில் ஆடி 4898 ரன்களை குவித்துள்ளார் ரோஹித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!