வெற்றிக்கு பிறகு ஸ்டெம்பை எடுத்து சென்ற தோனிக்கு கடிவாளம் போட்ட ஐசிசி: ஏன், என்ன காரணம் தெரியுமா?

First Published | Aug 23, 2024, 5:48 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஒவ்வொரு வெற்றிப் போட்டிக்குப் பிறகும் ஸ்டெம்பை எடுத்துச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த ஸ்டெம்புகளை தனது வீட்டில் சேகரித்து வைத்திருக்கும் தோனி, ஒவ்வொரு ஸ்டெம்பும் எந்தப் போட்டியுடையது என்பதை நினைவு கூர்ந்து பார்த்து மகிழ்வார். ஆனால், 2015 ஆம் ஆண்டு முதல் எல்இடி ஸ்டெம்புகள் அறிமுகமானதால், ஸ்டெம்புகளை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

MS Dhoni Carry Stumps

கிரிக்கெட்டில் தோனியை கொண்டாடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் தோனி கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் 15 ஆண்டுகாலம் பல சாதனைகளை படைத்துள்ளார். கபில் தேவிற்கு பிறகு இந்திய அணிக்கு முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று கொடுத்தார்.

MS Dhoni Carry Stumps

இதே போன்று, டி20 உலகக் கோப்பை தொடரையும் வென்று கொடுத்தார். மேலும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று கொடுத்தார். கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் தோனி சிறந்த பினிஷராகவும் அறியப்படுகிறார். கிட்டத்தட்ட 47 போட்டிகளுக்கு சிறந்த பினிஷராக வெற்றி தேடி கொடுத்துள்ளார்.

Tap to resize

MS Dhoni Carry Stumps

ஒவ்வொரு போட்டியிலும் தனது அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தவுடன் மைதானத்திலிருந்து ஸ்டெம்பை எடுத்துச் செல்வார். இது எல்லா போட்டியிலும் தோனி கடைபிடிக்கும் ஒரு வழக்கம். அது ஏன் என்று அவரே ஒரு போட்டியில் சொல்லியிருக்கிறார். அதாவது ஒவ்வொரு போட்டிக்காக நாம் எவ்வளவு கடினமாக உழைக்கிறோம், எவ்வளவு போராடி வெற்றி பெற்றோம் என்பதை மறக்காமல் இருப்பதற்காகவே ஒவ்வொரு போட்டியிலும் ஒரு ஸ்டெம்பை எடுத்துக் கொள்வேன்.

MS Dhoni Carry Stumps

ஸ்டெம்பை வைப்பதற்கே வீட்டில் தனி அறையும் இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் எடுத்து வரப்படும் ஸ்டெம்பை வீட்டில் வைத்துவிடுவேன். அதன் பிறகு போட்டிக்கான வீடியோ பார்த்து அது எந்த போட்டியின் ஸ்டெம்ப் என்பதை பார்த்து தெரிந்து கொண்டு பிரித்து வைத்துக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார்.

MS Dhoni Carry Stumps

ஆனால், அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு போட்டியில் எல்இடி ஸ்டெம்ப் பயன்படுத்தப்பட்ட நிலையில், ஸ்டெம்பை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஏனென்றால் ஸ்டெம்பின் விலை லட்சக்கணக்கில் என்பதால் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு தோனி ஸ்டெம்பை எடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பெயில்ஸை மட்டும் கீழே தட்டிவிட்டு அப்படியே சென்றுவிடுவார்.

MS Dhoni Carry Stumps

அதற்கு மாறாக போட்டிக்கான ஸ்டெம்பிற்கு பதிலாக மரத்தால் செய்யப்பட்ட ஸ்டெம்பை வீரர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தோனி ஐசிசியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால், அந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

Latest Videos

click me!