
எம்.எஸ்.தோனியின் ராஞ்சி பண்ணை வீடானது கைலாசபதி என்று அழைக்கப்படுகிறது. இந்த வீட்டின் பரப்பளவு மட்டும் 7 ஏக்கர். இந்த வீடு கட்டுவதற்கு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் எடுத்துக் கொண்டுள்ளது. தோனியே பார்த்து பார்த்து வடிவமைத்து இந்த வீட்டை கட்டியிருக்கிறார்.
இது தோனியின் கனவு வீடு என்று கூட சொல்லலாம். வளர்ப்பு பிராணிகள் விளையாடுவதற்கும், அழகான நீச்சல் குளம், இண்டீரியர், அழகான வெளிப்புற தோற்றம் என்று மனதிற்கு அமைதி தரும் வகையிலேயே இந்த வீட்டின் ஒவ்வொரு அசைவும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக இருந்தவர் எம்.எஸ்.தோனி தான். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சுற்றுலாப் பயணிகள் தோனியின் பண்ணை வீட்டிற்கு வெளியில் போட்டோக்களை எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள்னர்.
இந்திய அணியில் 2004 ஆம் ஆண்டு இடம் பெற்ற தோனி, தனது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறமையால் கேப்டன் பொறுப்பை ஏற்றார். 2007 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட தோனி சிறந்த கேப்டன்களில் ஒருவராக அறியப்பட்டார். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிகளை வென்று கொடுத்த ஒரே ஒரு கேப்டன்.
கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டாரான தோனி பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதுகளை வென்றுள்ளார். சிறந்த பினிஷராகவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையையும் தாண்டி அவர் ஒரு சிறந்த குடும்பஸ்தன். விலங்குகளை நேசிப்பதோடு, இயற்கை ஆர்வலராகவும் திகழ்கிறார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். பண்ணை வீட்டில் மனைவி சாக்ஷி, ஜிவா மற்றும் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் செல்லப் பிராணிகளுடன் வசித்து வருகிறார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஞ்சி ரிங் ரோடு அருகில் தோனியின் பண்ணை வீடு உள்ளது. கிட்டத்தட்ட 7 ஏக்கரில் கட்டப்பட்ட இந்த வீட்டில் மதிப்பு மட்டும் ரூ.6 கோடி இருக்குமாம். தோனியே பார்த்து பார்த்து இந்த வீட்டை வடிவமைத்து கட்டியிருக்கிறார். கூரை ஓடுகள் மற்றும் கறுப்பு கற்கள் கொண்ட கலவையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் தோனிக்கு பிடித்தமான எல்லா விஷயங்களும் உள்ளன. தோட்டம், கார் மற்றும் பைக் பார்க்கிங், தோட்டம், நீச்சல் குளம், செல்லப்பிராணிகள் தங்கும் பகுதிகள், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு பகுதிகள் என்று ஏராளமான வசதிகள் இந்த வீட்டில் செய்யப்பட்டுள்ளது.
தோனியின் பண்ணை வீட்டின் உட்புறம் நுட்பமானவை. அதோடு பிரம்மாண்டவை. தங்க நிறத்திலான உட்புற சுவர், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு மெத்தைகள் என்று வீட்டிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன. இந்த வீட்டிற்கு ஹர்திக் பாண்டியா தனது சகோதரர் குர்ணல் பாண்டியாவுடன் வந்திருக்கிறார்.
ராஞ்சியிலுள்ள தோனியின் பண்ணை வீட்டிற்கு ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது சகோதர் குர்ணல் பாண்டியா இருவரும் சிறப்பு விருந்தினராக வந்து சென்றுள்ளனர்.
கிரிக்கெட் மீதான காதல் தவிர்த்து வேகத்தின் மீது பைத்தியம் கொண்டவர். கார் மீது பைக்குகள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். ஆடி க்யூ7, ஜீப் கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக், ஹம்மர் எச்2, கிளாசிக் போண்டியாக் ஃபயர்பேர்ட் டிரான்ஸ் ஆம் மற்றும் லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 ஆகிய கார்களை வைத்திருக்கிறார். கான்ஃபெடரேட் ஹெல்கேட் எக்ஸ்32 முதல் ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் முதல் கவாஸாகி நிஞ்ஜா எச்2 மற்றும் யமஹா ஆர்டி350 என்று கிட்டத்தட்ட 100 பைக்குகளுக்கும் மேலாக வைத்திருக்கிறார்.