IPL 2025: போதும் போதும் நீங்கள் விளையாடியது – சிஎஸ்கேயில் மோசமான ஃபார்மால் வெளியேற்றப்படும் டாப் 5 பிளேயர்ஸ்!

First Published | Aug 23, 2024, 2:15 PM IST

IPL 2025-CSK : வரவிருக்கும் ஐபிஎல் (ஐபிஎல் 2025) தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரச்சின் ரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மகேஷ் தீக்ஷனா ஆகியோரை தக்க வைத்துக் கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படியானால் தோனியின் அணி விடுவிக்கக்கூடிய முக்கிய வீரர்கள் யார்? 
 

IPL 2025 CSK Released and Retained Players

IPL 2025 CSK Retained Players: ஐபிஎல் 2025க்காக 10 அணிகளும் தயாராகி வருகின்றன. வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடத்தப்பட உள்ளது. எனவே ஐபிஎல் விதிமுறைகளின்படி, அணிகளில் பல மாற்றங்கள் இருக்கும். தற்போது, ​​ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடியும். எந்த அணிகள் எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும்... யாரை விடுவிக்கும் என்பது கிரிக்கெட் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஐபிஎல் 2025 க்கு முன்பு எம்எஸ் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி விடுவிக்கக்கூடிய முதல் 5 வீரர்களின் பட்டியலைப் பார்த்தால்.. கிரிக்கெட் வட்டாரங்களின் பேச்சின்படி இதோ..

IPL 2025 CSK Released Players

ஷர்துல் தாக்கூர்

மும்பையைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் கடந்த சீசனில் 9 போட்டிகளில் 5 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். அதிக ரன்களும் எடுக்கவில்லை. ரூ.4 கோடிக்கு வாங்கப்பட்டதால் அவரிடம் இருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. எனவே சிஎஸ்கே ஷர்துல் தாக்கூரை விடுவிக்க வாய்ப்புள்ளது. 

Tap to resize

IPL 2025 CSK Released Players

மொயின் அலி

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி ஐபிஎல் 2024ல் 8 போட்டிகளில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். இந்த செயல்பாட்டை கருத்தில் கொண்டு சென்னை அணி மொயின் அலியையும் விடுவிக்க வாய்ப்புள்ளது. 

IPL 2025 CSK Released Players

டேரில் மிட்செல் 

நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல்லை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 14 கோடிக்கு வாங்கியது. ஆனால் ஐபிஎல் 2024ல் அவரால் 318 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, 1 விக்கெட் மட்டுமே எடுத்தார். அதிக விலைக்கு வாங்கப்பட்டதால் அவரது செயல்பாட்டில் சிஎஸ்கே திருப்தி அடையவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மிட்செல்லை சென்னை அணி விடுவிக்கும் என்று பேச்சு அடிபடுகிறது.

IPL 2025 CSK Released Players

தீபக் சாஹர்

ராஜஸ்தான் ஆல்ரவுண்டர் தீபக் சாஹரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் கடந்த 2 ஐபிஎல் சீசன்களாக அவர் காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். தீபக் சாஹர் ஐபிஎல் 2024ல் தொடரில் 8 போட்டிகளில் மட்டுமே விளையாடி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதற்கு முந்தைய சீசன் ஐபிஎல் 2023ல் 10 போட்டிகளில் விளையாடினார். 

IPL 2025 CSK Released Players

அஜின்க்யா ரஹானே

மும்பை பேட்ஸ்மேன் அஜின்க்யா ரஹானேவை அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்திற்கு சென்னை அணி ஒப்பந்தம் செய்தது. சீனியர் வீரர் என்பதால் அவரிடம் இருந்து பெரிய போட்டிகளில் வெற்றிகரமான ஆட்டத்தை தோனி அணி எதிர்பார்த்தது. ஆனால், ஐபிஎல் 2024ல் அவரது செயல்பாடு மோசமாக இருந்தது. அஜின்க்யா ரஹானே ஐபிஎல் 2023ல் 172க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் 326 ரன்கள் எடுத்தார். ஆனால் 2024ல் ரஹானே 123 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 242 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

Latest Videos

click me!