RCB Women Beat GGT Women by 6 Wickets : WPL 2025, மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2025 அமர்க்களமாக தொடங்கியது. ரிச்சா கோஷின் அதிரடியால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
WPL 2025: ருத்ரதாண்டவம் ஆடிய ரிச்சா கோஷ்; ஆர்சிபி த்ரில் வெற்றி; மிரண்டு போன குஜராத் ஜெயண்ட்ஸ்!
Richa Ghosh, Royal Challengers Bengaluru Women won by 6 wkts against Gujarat Giants : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் ஜெயண்ட்ஸ்: மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2025 அமர்க்களமாக தொடங்கியது. முதல் போட்டியிலேயே இரு அணிகளுமே ரன்கள் குவித்தன. மகளிர் பிரீம்யர் லீக் தொடரின் மூன்றாவது சீசனில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தனது முதல் WPL 2025 போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. குஜராத் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போட்டி, இறுதியில் ரிச்சா கோஷின் அதிரடியால், ஒரு ஓவர் மீதம் இருந்த நிலையில் ஆர்சிபி வெற்றி பெற்று இந்த சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது.
25
WPL 2025: ருத்ரதாண்டவம் ஆடிய ரிச்சா கோஷ்; ஆர்சிபி த்ரில் வெற்றி; மிரண்டு போன குஜராத் ஜெயண்ட்ஸ்!
முதல் போட்டியிலேயே ரன்கள் மழை
மகளிர் பிரீமியர் லீக் (WPL) மூன்றாவது சீசன் வெள்ளிக்கிழமை காதலர் தினத்தை முன்னிட்டு பிரம்மாண்டமாக தொடங்கியது. WPL 2025 முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங்கிற்கு வந்த குஜராத் ஜெயண்ட்ஸ் வீராங்கனைகள் பேட்டிங்கால் அடித்து நொறுக்கினர். இதனால் குஜராத் 20 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்தது. இருப்பினும், கடின இலக்கை துரத்திய ஆர்சிபி ஒரு ஓவர் மீதம் இருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களுடன் இலக்கை எட்டியது.
35
WPL 2025: ருத்ரதாண்டவம் ஆடிய ரிச்சா கோஷ்; ஆர்சிபி த்ரில் வெற்றி; மிரண்டு போன குஜராத் ஜெயண்ட்ஸ்!
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தொடக்கம் முதலே அற்புதமான பேட்டிங்கால் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என ரன்கள் குவித்தது. இதனால் 20 ஓவர்களில் வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 201 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பெத் மூனி அற்புதமான இன்னிங்ஸை ஆடினார். 42 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த அவரது இன்னிங்ஸில் 8 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் சூறாவளி பேட்டிங்கால் 79 ரன்கள் எடுத்தார். அவரது 79 ரன்கள் இன்னிங்ஸில் 3 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடங்கும்.
45
WPL 2025: ருத்ரதாண்டவம் ஆடிய ரிச்சா கோஷ்; ஆர்சிபி த்ரில் வெற்றி; மிரண்டு போன குஜராத் ஜெயண்ட்ஸ்!
ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துரத்தலின் தொடக்கத்திலேயே அதிர்ச்சிக்குள்ளானது. நல்ல தொடக்கத்தில் இருந்த கேப்டன் மந்தனா 9 ரன்கள் எடுத்து 2ஆவது ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்தார். அதே ஓவரில் டேனியும் அவுட்டானார். இதனால் 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி தடுமாறியது. ஆனால், அதன் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியதால் ரன்கள் குவித்து வெற்றியை நோக்கி முன்னேறியது.
55
WPL 2025: ருத்ரதாண்டவம் ஆடிய ரிச்சா கோஷ்; ஆர்சிபி த்ரில் வெற்றி; மிரண்டு போன குஜராத் ஜெயண்ட்ஸ்!
எலிஸ் பெர்ரி அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். ராகவி பிஸ்ட் 25 ரன்கள் எடுத்தார். ரிச்சா கோஷ் சூறாவளி பேட்டிங்கால் அசத்தினார். இறுதிவரை களத்தில் நின்று ஆர்சிபிக்கு வெற்றியை தேடித் தந்தார். ரிச்சா தனது 64 ரன்கள் இன்னிங்ஸில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடித்தார். ரிச்சாவுடன் கனிகா அஹுஜா 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் மொத்தமாக இரண்டு அணிகளும் 400 ரன்களைத் தாண்டின. முதல் போட்டியிலேயே ஆர்சிபி வெற்றியை பெற்று நடப்பு சாம்பியன் என்பதை நிரூபித்து காட்டியது. இருந்த போதிலும் ஆர்சிபியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 9 ரன்களில் ஆட்டமிழந்தது தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.