#IPL2021 ஐபிஎல்லில் இருந்து விலகிய ஆஸி., வீரர்..! அவருக்கு பதிலா நியூசிலாந்து வீரரை தட்டி தூக்கிய ஆர்சிபி

Published : Mar 13, 2021, 03:32 PM IST

ஐபிஎல்லில் இருந்து ஆர்சிபி அணியில் ஆடிய ஆஸி., வீரர் ஜோஷ் ஃபிலிப் விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக 21 வயது இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ஃபின் ஆலனை ரூ.20 லட்சத்திற்கு எடுத்துள்ளது ஆர்சிபி அணி.  

PREV
13
#IPL2021 ஐபிஎல்லில் இருந்து விலகிய ஆஸி., வீரர்..! அவருக்கு பதிலா நியூசிலாந்து வீரரை தட்டி தூக்கிய ஆர்சிபி

ஐபிஎல் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல்லுக்கான ஏலம் கடந்த பிப்ரவரி 18ம் தேதி சென்னையில் நடந்தது. முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள ஆர்சிபி அணி, கைல் ஜாமிசன், க்ளென் மேக்ஸ்வெல் ஆகிய வீரர்களை பெருந்தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

23

ஆர்சிபி அணி அனைத்து இடங்களையும் பூர்த்தி செய்துவிட்ட திருப்தியில் ஐபிஎல்லுக்காக தயாராகிவந்த நிலையில், ஆஸி., இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ஜோஷ் ஃபிலிப் ஐபிஎல்லில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். 2020 ஐபிஎல் சீசனில் ஃபிலிப்பை ரூ.20 லட்சம் என்ற அவரது அடிப்படை விலைக்கு எடுத்து ஆர்சிபி ஆடவைத்தது. கடந்த சீசனில் அவர் பெரிதாக சோபிக்காத போதிலும், அவரை தக்கவைத்தது ஆர்சிபி அணி.
 
33

ஆனால் அவர் இந்த சீசனிலிருந்து விலகிவிட்டார். இதையடுத்து நியூசிலாந்தை சேர்ந்த 21 வயது இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஃபின் ஆலனை ரூ.20 லட்சத்திற்கு எடுத்துள்ளது ஆர்சிபி. ஃபின் ஆலன் நியூசிலாந்து உள்நாட்டு டி20 தொடரில் 194 என்ற ஸ்டிரைக்ரேட்டில் ஆடி 512 ரன்களை குவித்தார். அந்த தொடரில் 25 சிக்ஸர்களை விளாசினார். பெரிய ஷாட்டை அசால்ட்டாக ஆடக்கூடிய அவரை ஆர்சிபி அணி எடுத்துள்ளது.
 
click me!

Recommended Stories