சிஎஸ்கே முதல் ஆர்சிபி வரை – ரிஷப் பண்டுக்கு போட்டி போடும் ஐபிஎல் டீம்ஸ், என்ன காரணம் தெரியுமா?

First Published Oct 19, 2024, 3:46 PM IST

Rishabh Pant in IPL 2025 Auction: ஐபிஎல் 2025 நெருங்கி வருவதால், அணி மாற்றங்கள் மற்றும் வீரர்களின் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸிலிருந்து விடுவிக்கப்படுவார் என்றும், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

IPL 2025, Delhi Capitals Released Players

Rishabh Pant in IPL 2025 Auction: நாளுக்கு நாள் ஐபிஎல் 2025 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. என்ன நடக்க போகிறது, எந்தெந்த அணிகளில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் அல்லது அந்தந்த அணியிலே வீரர்கள் இடம் பெற்று விளையாடுவார்களா என்பது குறித்து ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால், இதற்கான பதில் வரும் 31 ஆம் தேதிக்குள்ளாக கிடைத்து விடும். ஏனென்றால், ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட 31 ஆம் தேதி தான் கடைசி நாள் என்று அறித்துள்ளது.

Rishabh Pant, IPL 2025

அதற்குள் ஒவ்வொரு அணியில் உள்ள தலைமை பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள். மும்பை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக மஹேலா ஜெயவர்தனே இடம் பெற்றுள்ளார். ஜாகீர்கான் லக்னோ அணியின் ஆலோசகராக இடம் பெற்றுள்ளார். ரிக்கி பாண்டிங் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Latest Videos


Delhi Capitals Released and Retained Players, IPL 2025, Rishabh Pant

இதுதவிர டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஹேமங் பதானி மற்றும் வேணுகோபால் ராவ் ஆகியோர் முறையே தலைமை பயிற்சியாளர் (ஐபிஎல்) மற்றும் கிரிக்கெட் இயக்குநராக (ஐபிஎல்) இணைந்துள்ளனர். இப்படி ஒவ்வொரு அணியிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

CSK Retained and Released Players

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தற்போது தலைப்பு செய்திகளில் ஒருவராக இருப்பவர் ரிஷப் பண்ட் தான். ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. மேலும், டெல்லி கேபிடல்ஸ் ரிஷ்ப் பண்டை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2025 Mega Auction, CSK Retained Players

அப்படி டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பண்டை விடுவித்தால் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவும். ஏனென்றால், ஆர்சிபியின் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்தி கடந்த சீசனுடன் ஓய்வு பெற்றார். ஆதலால், ரிஷப் பண்டை ஏலத்தில் எடுக்க தீவிரமாக இருக்கும்.

CSK Retained Players, IPL 2025

இதே போன்று தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தோனிக்கு பிறகு அடுத்த விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி சிஎஸ்கே அணியில் எழுந்துள்ள நிலையில், சிஎஸ்கேயும், ரிஷப் பண்டை ஏலத்தில் எடுக்க தீவிரமாக இருக்கும்.

Royal Challengers Bengaluru, IPL 2025 Mega Auction

சிஎஸ்கே:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இடம் பெற்று விளையாடுவாரா இல்லையா என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், பண்ட் ஏலத்தில் இருந்தால் அவரை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துக் கொள்ள ஆர்வமாக இருக்கும். மற்ற அணிகளை விட கூடுதல் தொகை கொடுத்து ஏலம் எடுக்கும் என்று கூட சொல்லலாம். ஐபிஎல் தொடர்களில் ரிஷப் பண்டின் அனுபவத்தை பார்க்கையில் சிஎஸ்கே அணிக்கு சரியான தேர்வாக இருக்கலாம்.

IPL 2025, RCB Retained Players

சிஎஸ்கே:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இடம் பெற்று விளையாடுவாரா இல்லையா என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், பண்ட் ஏலத்தில் இருந்தால் அவரை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துக் கொள்ள ஆர்வமாக இருக்கும். மற்ற அணிகளை விட கூடுதல் தொகை கொடுத்து ஏலம் எடுக்கும் என்று கூட சொல்லலாம். ஐபிஎல் தொடர்களில் ரிஷப் பண்டின் அனுபவத்தை பார்க்கையில் சிஎஸ்கே அணிக்கு சரியான தேர்வாக இருக்கலாம்.

Delhi Capitals Retained Players, Rishabh Pant

ஆர்சிபியைப் பொறுத்த வரையில் கர்நாடகாவைச் சேர்ந்த கேஎல் ராகுலை ஏலத்தில் எடுக்க ஆர்வமாக இருந்தது. ஆனால், கேஎல் ராகுல் லக்னோ தக்க வைத்துக் கொள்ள இருப்பதாக மறைமுகமாக தகவல் வெளியான நிலையில் அவரை லக்னோ விடுவிக்க வாய்ப்பில்லை என்பதை புரிந்து கொண்ட ஆர்சிபி முழு கவனத்தையும் ரிஷப் பண்ட் மீது திருப்பியுள்ள்ளது. இதுவரையில் ஐபிஎல் டிராபி கைப்பற்றாத மோசமான அணியின் சாதனை பட்டியலில் ஆர்சிபி இடம் பெற்றுள்ளது.

click me!