
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் 16 சீசன்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை சாம்பியனாகியுள்ளன.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 2024ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க இருக்கிறது. இதற்கான ஏலம் வரும் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. இந்த ஏலத்திற்கு 1166 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து வைத்திருந்தனர்.
இதில், 833 வீரர்கள் நீக்கப்பட்ட நிலையில், 333 வீரர்கள் மட்டுமே ஐபிஎல் ஏலத்தில் இடம் பெறுகின்றனர். இந்த 333 வீரர்களில் 214 இந்தியர்கள் மற்றும் 119 வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள். இதில், 77 வீரர்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட இருக்கின்றனர். அதிலேயும், 30 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மட்டும் 6 இடங்கள் காலியாக இருக்கிறது இதி. 3 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 3 இந்திய வீரர்கள் என்ற அடிப்படையில் வீரர்களை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க இருக்கிறது. சென்னை அணியில் அதிகபட்சமாக ரூ. 31.4 கோடி மீதமுள்ளது.
இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியில் ரூ.17.75 கோடி எஞ்சியிருக்கிறது. இந்த அணியில் 8 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட இருக்கின்றனர். இவர்களில் 4 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில், தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து 2013, 2015, 2017, 2019, 2020 என்று 5 முறை டிராபியை வென்று கொடுத்துள்ளார்.
மேலும், 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் மும்பை இந்தியன்ஸ் அணி
2013 – சாம்பியன்ஸ்
2014 – பிளே ஆஃப்
2015 – சாம்பியன்ஸ்
2016 – லீக் ஸ்டேஜ்
2017 – சாம்பியன்ஸ்
2018 – லீக் ஸ்டேஜ்
2019 – சாம்பியன்ஸ்
2020 – சாம்பியன்ஸ்
2021 – லீக் ஸ்டேஜ்
2022 – லீக் ஸ்டேஜ்
2023 – பிளே ஆஃப்
என்று வந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவிற்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ரோகித் சர்மாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்ப தொடங்கினர்.
மேலும், ரோகித் சர்மாவிற்காகத்தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவு கொடுத்தோம். இனி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவு கொடுக்கமாட்டோம் என்று கூறி வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியை கொண்டாடி வருகின்றனர். இதுவரையில் அவர் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்றெல்லாம் ஒப்பிட்டு பேசிவருகின்றனர்.
உண்மையில் கடந்த 2022 ஆம் ஆண்டே சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்த தோனிக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால், 8 போட்டிகளுக்கு ரவீந்திர ஜடேஜா கேப்டனாக செயல்பட்டார். ஆனால், இதில், 2 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே வெற்றி பெற்றது. மற்ற 6 போட்டிகளில் தோல்வியை தழுவியது.
இதையடுத்து ரவீந்திர ஜடேஜாவிற்குப் பதிலாக எம்.எஸ்.தோனி கேப்டனாக பொறுப்பேற்றார். எஞ்சிய 6 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் மூலமாக 14 லீக் போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று 10 போட்டிகளில் தோல்வி அடைந்து லீக் ஸ்டேஜ் உடன் சென்ன்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது.
இதில், ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணி அதிக போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தால் அவர் தான் தொடர்ந்து கேப்டனாக இருந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணி அதிக போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தால் அவர் தான் தொடர்ந்து கேப்டனாக இருந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் சீசனில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி சாம்பியனானது.
இதே போன்று ஒரு கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது முதல் சீசனில் விளையாடும் ஹர்திக் பாண்டியா எப்படியும் டிராபியை வென்று கொடுப்பார் என்ற நம்பிக்கையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் இருப்பதாக சொல்லப்படுகிறது.